Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் பேர் வருகை

37வது சென்னை புத்தகக் காட்சி கடந்த 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. நாட்டிலேயே அதிக நாட்களாக 13 நாட்கள் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சிக்குக் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். 13 லட்சம் பேர் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தகக் காட்சியை ஒருங் கிணைக்கும் பபாஸி அமைப்பின் பொருளாளர் ஒளிவண்ணன் கூறுகையில், “கடந்த ஆண்டு 9 லட்சம் பேர் வந்திருந்தனர். இந்த ஆண்டு ஊடகங்களின் ஆதரவி னாலும், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தி ருப்பதாலும் அதிக மக்கள் வருகை தந்துள்ளனர்,” என்றார்.

இலக்கியம், அரசியல், மதம், குழந்தைகள் இலக்கியம், பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள் என அனைத்து விதமான புத்தக ரசிகர்களும் இந்த புத்தக காட்சியில் புத்தகங்கள் இருந்தன. கடைசி நாள் என்பதால் பலர் தாங்கள் வாங்கத் தவறிய புத்தகங்களையும், புத்தக விமர்சிப்பாளர்கள் பரிந்துரைத்த புத்தகங்களையும் வாங்க வந்தி ருந்தனர். புதன்கிழமையாக இருந்தா லும் சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து வந்திருந்தனர்.

புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளுக்கும் குறைந்த பட்சம் 70,000 பேரிலிருந்து அதிக பட்சம் 1.5 லட்சம் பேர் வந்திருந்தனர். பதின்மூன்று கோடிக்கு மேலாக புத்தகங்கள் விற்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x