Published : 31 May 2016 09:04 AM
Last Updated : 31 May 2016 09:04 AM

புதுச்சேரி காங்கிரஸில் அமைச்சர் பதவிக்கும் கடும் போட்டி

புதுச்சேரி காங்கிரஸில் முதல்வர் பதவியைத் தொடர்ந்து அமைச்சர் கள் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ராசியைக் காரணம் காட்டி சபாநாயகர் பதவியை பெற பலரும் தயங்குகின்றனர்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட் டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கட்சிக்குள் எதிர்ப்பு ஏற்பட்டு மறியல், கல்வீச்சு வரை போனது.

இந்நிலையில், அமைச்சர் பத விக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள் ளது. தற்போது வென்றுள்ள காங் கிரஸ் எம்எல்ஏக்களில் அனந்த ராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் முன்பு எம்எல்ஏக்களாக இருந்தா லும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதுதான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் சிவக்கொழுந்து, ஜான்குமார், தீப் பாய்ந்தான், தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி ஆகிய 6 பேரும் முதன்முறையாக எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வைத்திலிங்கம் முதல்வராக வும், நமச்சிவாயம், லட்சுமிநாராய ணன், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக் கண்ணன் ஆகியோர் அமைச்சர் பொறுப்புகளில் ஏற்கெனவே இருந் துள்ளனர். அமைச்சர் பதவியைப் பெற கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் ஏற்கெனவே டெல்லிக்கு சென்று வந்துள்ளனர். தற்போது வைத்திலிங்கம், ஷாஜகான் ஆகியோர் முக்கிய பதவிகளைப் பெற டெல்லிக்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கட்சி வட்டாரங் களில் கூறியதாவது: முதல்வர் தேர்வுக்கு பிறகு தேசிய செயலர் சின்னாரெட்டி, மாநிலத் தலைவர் நமச்சிவாயத்தை அவரது வீட் டுக்கே சென்று சந்தித்தார். மேலிடம் கூறிய முக்கிய விவரங்களை கூறி அவரை சமாதானப்படுத்தி யுள்ளார். காங்கிரஸ் கட்சி நமச் சிவாயத்துக்கு உரிய அங்கீகாரம் தரும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் அவருக்கு அமைச்சர வையில் முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

சபாநாயகர் சென்டிமென்ட்

ஆளுநர் பதவியேற்புக்கு பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் வைத் திலிங்கம் சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்துவிட்டு, முக்கிய பொறுப்பு பெற டெல்லிக்கு சென் றுள்ளார். வேறு சிலரும் சபாநாய கர் பதவியை ஏற்க மறுத்துள் ளனர்.

சபாநாயகர் பதவியைப் பெற யாரும் தீவிரம் காட்டவில்லை. சபாநாயகர் பதவியை பெற்றால் அடுத்தமுறை வெற்றிபெற முடி யாது என்ற சென்டிமென்ட் புதுச்சேரியில் உள்ளதே இதற்கு காரணம்.

முன்பு அமைச்சர்களாக இருந்த பலரும் மீண்டும் அமைச்சர் பதவி பெற விரும்புகின்றனர். புதுச்சேரி பிராந்தியம் மட்டுமில்லாமல் காரைக்கால் பிராந்தியத்தில் தேர் வானவருக்கும் அமைச்சர் பதவி தர வேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் புதிதாக தேர்வானவர் களில் சிலரும் அமைச்சர் பதவிக் கான முயற்சியை தொடங்கியுள் ளனர்.

அமைச்சரவையில் திமுக இடம்பெறும் வாய்ப்பு இல்லை என்ற சூழலே நிலவுகிறது. தற்போது காங்கிரஸில் அமைச்சர் பதவியை பெற நடக்கும் போட்டி யால் பதவியேற்பு விழா நடப்பது தாமதமாகும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

முதல்வரை தவிர்த்து 5 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் போட்டி கடுமையாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x