Published : 09 Jul 2017 10:47 AM
Last Updated : 09 Jul 2017 10:47 AM

புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முழுஅடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் இருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வெளி யேறக்கோரி நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இத னால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அரசின் பரிந் துரையின்றி பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த 3 பேருக்கும், ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக் கையைக் கண்டித்தும், அவர் புதுச்சேரியை விட்டு வெளி யேறக் கோரியும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில அமைப் புகள் புதுச்சேரியில் நேற்று முழு அடைப்புப் போராட்டத் துக்கு அழைப்பு விடுத் திருந்தன. இந்த போராட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

'போராட்டம் தேவையில்லை. எனினும், மாநில உரிமைக்கான போராட்டம் என்பதால் அதை எதிர்க்கவில்லை' என்று அதிமுக தெரிவித்திருந்தது. முக்கிய எதிர்க் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

வெறிச்சோடிய வர்த்தக வீதிகள்

இந்நிலையில் நேற்று நடை பெற்ற முழுஅடைப்புப் போராட் டத்தால், புதுச்சேரியின் முக்கிய வர்த்தக வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, குபேர் பஜார் மற்றும் மார்க்கெட் உள்ளிட்டப் பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் பங்க்குகள், திரை யரங்குகள், தனியார் பள்ளி கள் மற்றும் கல்லூரிகள் இயங்க வில்லை.

தனியார் மற்றும் அரசுப் பேருந் துகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங் கின.

5 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கல்வீசி தாக்கப் பட்டன. ஆட்டோக்கள், டெம்போக் கள், சுற்றுலா வாகனங்கள் இயங்க வில்லை. புதுச்சேரி பேருந்து நிலையம், முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட் டிருந்தன. கிராமப்புற பகுதிகளிலும் கடைகள் முற்றிலுமாக அடைக் கப்பட்டிருந்தன. இந்த முழு அடைப்பால் புதுச்சேரிக்கு வார இறுதி நாளில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் அவதிக்கு ஆளாயினர்.

மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி மாணவர் கூட்ட மைப்பினர் மோட்டார் பைக்கில் புதுச்சேரி முழுவதும் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர் கூட்டமைப்பினர் அப்புறப்படுத்தப்பட்டனர். நகரெங் கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆயிரம் பேர் கைது

காங்கிரஸ், திமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டன. சுல்தான்பேட்டை பகுதியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப் பட்டனர்.

வெங்கடசுப்பா சிலை அருகே ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். அரியாங்குப்பம் பகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜிவ் காந்தி சிலை சதுக்கத்தில் 150 பேர், இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் 78 பேர் என சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு பயணிகள் பாதிப்பு

சென்னையில் இருந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 27 சுற்றுலாப் பயணிகள் தனியார் வால்வோ பேருந்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். புதுச்சேரி வெங்கடசுப்பா சிலை யருகில் வந்தபோது பேருந்தின் முகப்பு கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

இதில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு பயணிகள் அங்கிருந்த போலீஸாரிடம் முறையிட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x