Published : 23 Jan 2015 09:57 AM
Last Updated : 23 Jan 2015 09:57 AM
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) கூடுதல் பொதுமேலாளர் ரவிக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2014-15 நிதிநிலை அறிக்கையில் மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி பல்வேறு புகழ்பெற்ற இடங்களுக்கு சிறப்பு யாத்திரை ரயில்கள் மூலம் சுற்றுலா பேக்கேஜ்களை ஐ.ஆர்.சி.டி.சி நிறைவேற்றி வருகிறது.
சிறப்பு யாத்திரை ரயில்களில் 7 ஸ்லீப்பர் பெட்டிகள், 5 ஏசி பெட்டி கள் உட்பட மொத்தம் 13 பெட்டி கள் இருக்கும். சைவ உணவு தயாரித்து வழங்க தனியே பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவஜோதிர் லிங்க யாத்திரை மதுரையில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி புறப்பட்டு ஈரோடு, சேலம் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக சைலம் செல்கிறது. இதன் மொத்த சுற்றுலாப் பயண நாட்கள் 14 ஆகும். ஸ்டாண்டர்டு கட்டணம் ரூ.12,740, கம்பர்டு கட்டணம் ரூ.27,580, டீலக்ஸ் பிரிவுக்கு ரூ.37,100 கட்டணமாகும்.
குரு கிருப யாத்திரை
அதேபோல பிப்ரவரி 5-ல் குரு கிருப யாத்திரை மதுரையில் புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக மந்த்ராலயம், பண்டரிபுரம் செல் கிறது. பயண நாட்கள் மொத்தம் 7 ஆகும். ஸ்டாண்டர்டு கட்டணம் ரூ.6,370, கம்பர்டு கட்டணம் ரூ.13,790, டீலக்ஸ் பிரிவுக்கு ரூ.18,550 கட்டண மாகும். மேலும், தகவல்களுக்கு சென்னை மற்றும் புதுச்சேரி 044-64594959, 9840902916, 9003140681 காட்பாடி, 9840948484 மதுரை 9003140714, 9840902915, கோவை 9003140680.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT