Published : 16 May 2016 07:54 AM
Last Updated : 16 May 2016 07:54 AM

பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரவக்குறிச்சி தொகுதி: தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதி ஆரம்பம் முதலே பரபரப் புடன் இருந்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி 1952-ல் உருவாக்கப் பட்டது. தமிழகத்தில் பெரிய தொகுதியான அரவக்குறிச்சி, 2011 தேர்தலுக்கு முன் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 1991-ல் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இத்தொகுதி பிரபலமானது.

2011 தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, அதிமுக சார்பில் வி.வி.செந்தில் நாதன் போட்டியிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அரவக்குறிச்சி யில் கே.சி.பழனிசாமி வென்றார்.

தற்போதைய தேர்தல் அறிவிப் புக்கு முன்பே, காங்கிரஸ் வேட்பாள ராக தன்னை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தார், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதி மணி. இத்தொகுதி அதிமுக வேட் பாளராக, முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிக்கப் பட்டதும், இத்தொகுதி அனைவரின் கவனம் ஈர்க்கும் தொகுதியானது.

இதற்கிடையில், திமுக-காங் கிரஸ் கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சுயேச்சையாகப் போட்டி யிடுவதாக ஜோதிமணி அறிவித்தார். பின்னர் அவர் போட்டியிலிருந்து விலகினார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், தற்போதைய எம்எல்ஏவும், தொழிலதிபருமான கே.சி.பழனிசாமியும் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகமானது.

கடந்த ஏப்ரல் 22-ல் அரவக் குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அய் யம்பாளையத்தில், அதிமுக பிரமு கர் அன்புநாதனின் வீடு மற்றும் கிடங்கில் வருமான வரித் துறை யினர் சோதனை நடத்தி, ரூ.5 கோடி ரொக்கம், பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டறியும் இயந்திரம், கார்கள், மத்திய அரசின் பெயர், சின்னம் பொறிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கடந்த 10-ம் தேதி திமுக வேட் பாளர் கே.சி.பழனிசாமியின் வீடு, அலுவலகம், அவருக்குச் சொந்த மான தங்கும்விடுதி, சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.பி.சிவராமனின் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு, ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் செந்தில் பாலாஜியின் உறவினரான ராமேஸ் வரபட்டி கோழி பாலு வீட்டில், வரு மான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இத்தொகுதி வாக்காளர்களி டமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. வாக்குக்கு இரு தரப்பி லும் சேர்த்து ரூ.5,000 வரை கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது. இந்நிலை யில், வாக்காளர்களுக்கு அதிமுக தரப்பில் ரூ.2,000, திமுக தரப்பில் ரூ.1,000 வழங்கப்பட்டது. இத்தொகுதியைச் சேர்ந்தவர்கள் பூத் சிலிப்பை வைத்துக்கொண்டு, பணம் கொடுக்கும் கட்சியினரைத் தேடி அலைந்தனர்.

திமுக தரப்பில் மேலும் ரூ.1,000 அல்லது ரூ.1,500 வழங்கப்படலாம் என்றும், அதைக் காட்டிலும் இரு மடங்கு வழங்க அதிமுக தரப்பு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

வாக்காளர்களுக்கு பணம் வழங் குவது தொடர்பாக அதிக புகார் கள் வந்ததால், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதும், இரு தரப்புமே போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதுமே தேர்தல் ஒத்திவைப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x