Published : 22 Mar 2017 09:05 AM
Last Updated : 22 Mar 2017 09:05 AM

பயிர்க் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மூலம் ஏக்கருக்கு மாவட்டத்தைப் பொறுத்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரணம் கிடைக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

அர.சக்கரபாணி (திமுக கொறடா):

விவசாயிகளின் நிலங்களில் 5 ஏக்க ருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப் படுகிறது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மூலம் கணக்கெடுத்து விவசாயிகளின் நிலங்கள் முழுமைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்படும் நிவாரணத்தொகை போதுமானது அல்ல. பழநி பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பில் நெய்க்காரப்பட்டி, ஆய்குடி பகுதியை சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித் தோம். ஆனால் அவர் இனி சேர்க்க முடியாது என தெரிவித்து விட்டார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:

மூத்த ஐஏஎஸ் அதிகாரியுடன் சேர்ந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்துவிட்டோம். விடு பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் நீங்கள் கூற வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி தொடர்பான விதியின்படி, 33 சதவீதம் பயிர் பாதிப்பு இருந்தால் நிவாரணம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விதிகளில்தான் 5 ஏக்கர் என்ற கட்டுப்பாடு உள்ளது. அந்த விதிமுறைகள்படிதான் வழங்கப்படுகிறது. தற்போது இடுபொருள் மானியமாக ரூ.2,247 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மாநில அரசின் பங்காக ரூ.410 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்க்காப்பீடு மூலம் விவசாயி களுக்கு நிவாரணமாக மாவட்டம் மற்றும் பயிர்களைப் பொறுத்து ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும் விவசாயிகள் நிலவரி முழுமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மனித வேலைநாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x