Published : 09 Jul 2017 11:19 AM
Last Updated : 09 Jul 2017 11:19 AM

பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் கைது

பத்திரிகை செய்திகளை பிடிஎப் முறையில் மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட மென்பொறியாளரை போலீஸார் கைது செய்தனர்.

நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் செய்திகள் புத்தக வடிவிலேயே பிடிஎப் பைலாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக செய்திகள் வெளியானதால், வார இதழ்களின் விற்பனை குறைந்தன.

அதைத் தொடர்ந்து வார இதழ் களின் நிர்வாகிகள் சிலர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் அன்பரசு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

சமூக வலைதளங்களில் வந்த பிடிஎப் பைல்கள் யார் மூலம் அனுப் பப்படுகின்றன என்பதை போலீஸார் ஆய்வு செய்தததில் magnet.com என்ற இணையதள முகவரியில் இருந்து அனுப்பப்படுவது தெரிந் தது. மேக்னெட் டாட்காமை தூத்துக் குடியைச் சேர்ந்த ஆனந்த் என் பவர் நடத்தி வருவது தொடர் விசா ரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருக்கிறார்.

நாளிதழ் மற்றும் வார இதழ்களின் இணையதளத்துக்குள் சென்று முறையான அனுமதியில்லாமல் செய்திகளைத் திருடி, பிடிஎப் பைலாக மாற்றி, சமூக வலைதளங் களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இவர் மீது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்து தல், நஷ்டத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x