Published : 16 May 2016 07:18 AM
Last Updated : 16 May 2016 07:18 AM

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் மொத்தம் 6,640 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 5,417 வாக்குச் சாவடிகள் கலவரம் ஏற்படும் பாதிப்புள்ளவை என்றும், 1,223 வாக்குச்சாவடிகள் முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்கும் மற்றும் பண நடமாட்டம் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த 6,640 வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப்படை வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மற்ற சாதாரண வாக்குச்சாவடிகளில் ஒரு போலீஸ்காரர் மட்டும் இருப்பார்.

தமிழ்நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்படும். தமிழ்நாடு முழுவதும் 68 மையங்களில் வாக்கு கள் எண்ணப்படுகின்றன. இந்த 68 மையங்களிலும் நேற்று மாலை யில் அந்தந்த பகுதி போலீஸ் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 'ஸ்டிராங்க் ரூம்', கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டிய இடங்கள், பூத் ஏஜெண்டுகள் இருக்க வேண்டிய இடங்களை அவர்கள் பார்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x