Last Updated : 30 Dec, 2016 09:49 AM

 

Published : 30 Dec 2016 09:49 AM
Last Updated : 30 Dec 2016 09:49 AM

பண மதிப்பு நீக்கம் எதிரொலி: 10 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடக்கம்

ஜனவரிக்குள் 50 ஆயிரம் கணக்குகள் தொடங்க இலக்கு



பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கட்டுமானத் தொழி லாளர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கும் பணியை இந்திய ரியல் எஸ்டேட் நிறு வனங் களின் கூட்டமைப்பு (கிரெடாய்) மும்முரமாகச் செய்து வருகிறது.

கறுப்புப் பணம், வரி ஏய்ப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர் களுக்கு சம்பளமாக வழங்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மணிக்கணக்கில் வங்கி முன்பு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்ததால், பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லா ததால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போய்விட்டனர்.

இந்நிலை நீடித்தால் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) இப்பிரச் சினைக்கு உடனடி தீர்வு காண களம் இறங்கியது. முதலில் தங்கள் உறுப்பினர்களின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கத் திட்டமிட்டனர்.

அதன்படி பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய 3 வங்கி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்தனர். வங்கியின் உதவி மேலாளர் மற்றும் அதிகாரி ஆகியோர் கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கே சென்றனர். அங்கு பணியில் இருக்கும் 2 கிரெடாய் ஊழியர்களை உத விக்கு அழைத்துக் கொண்டு கட்டு மானப் பணியாளர்களிடம் ‘நோ யுவர் கஸ்டமர்’ உள்ளிட்ட படிவங் களைப் பூர்த்தி செய்து வாங்கிக் கொண்டனர். பணியாளரின் கைரேகை, புகைப்படம் எடுத்து உடனுக்குடன் வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர்.

அத்துடன் வங்கிக் கணக் கில் பணத்தை எப்படி செலுத்து வது, பணத்தை எப்படி எடுப்பது? என்று பயிற்சியும் அளிக்கப் படுகிறது. வங்கிக் கணக்கு தொடங்கியதும் டெபிட் கார்டு தரப்படுகிறது. அத்துடன் பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் ‘கிப்ட் கார்டு’ போல ‘ப்ரீ லோடட் கார்டும்’ தரப்பட்டது. அந்த கார்டைக் கொண்டு ரூ.2 ஆயிரம் வரை மதிப்புள்ள பலசரக்கு போன்றவற்றை வாங்கிக்கொள் ளலாம்.

கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கே நடமாடும் ஏடிஎம் வருவதால் கட்டுமானத் தொழி லாளர்கள் எளிதாகப் பணம் எடுத்துக்கொள்கின்றனர். கிரெடாயின் இந்த நடவடிக்கை யால், சொந்த ஊருக்குச் சென்ற வடமாநில கட்டுமானத் தொழி லாளர்களில் பாதிபேர் மீண்டும் தமிழ் நாட்டுக்கு திரும்பிவிட்டனர்.

இதுகுறித்து கிரெடாய் தமிழ்நாடு முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் கூறியதாவது:

சென்னையைச் சுற்றித்தான் கட்டுமானத் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி. சாலையில் மிகப் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். இவர்களில் இதுவரை 5 ஆயிரத்து 800 பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுத்துள்ளோம். வரும் ஜனவரி மாதத்துக்குள் 50 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். சென்னை தவிர கோவை, திருச்சியிலும் வங்கிக் கணக்கு தொடங்கும் பணி நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 6 ஆயிரம் வடமாநில தொழி லாளர்கள் சொந்த ஊருக்கு போய் விட்டனர். தங்குமிடம், கேன்டீன், வங்கிக் கணக்கு தொடங்குதல் என்று நாங்கள் எடுத்த நடவடிக் கைகளால் சொந்த ஊருக்கு திரும்பியவர்களில் 3 ஆயிரம் பேர் சென்னை திரும்பிவிட்டனர் என்றார் நந்தகுமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x