Published : 18 Jan 2017 08:55 AM
Last Updated : 18 Jan 2017 08:55 AM

பணமதிப்பு நீக்கம் குறித்து பிரச்சாரம் செய்ய பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 21 பேர் குழு: சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு

பணமதிப்பு நீக்கம் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமி ழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித் துள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு பணம் எடுப்பதற்காக வங்கிகள், ஏடிஎம்.களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும், போராட் டம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக காங் கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், முன்னாள் மத்திய அமைச் சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலை மையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இது தவிர மாநில அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பீட்டர் அல் போன்ஸ் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி இணைத் தலை வராகவும், முன்னாள் எம்.பி. ஜே.எம். ஹாரூண் அமைப்பாள ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.பி. பி.விஸ்வ நாதன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.விஜயதரணி, ஜே.ஜி. பிரின்ஸ், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்.சி. பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கே.கோபிநாத், எம்.என்.கந்த சாமி, டி.என்.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, கே.தணிகாச்சலம், செய்தித் தொடர்பாளர்கள் எஸ்.எம். இதாயத்துல்லா, சொர்ணா சேதுராமன், சிவ ராஜசேகரன், டி.பெனட் அந்தோணிராஜ், வாழப்பாடி இராம.சுகந்தன், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விஜய் இளஞ்செழியன், மகளிர் காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பி. ஜான்சிராணி, சேவா தளம் அமைப்பின் தலைவர் விஜயன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இக்குழுவின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார், தமிழக ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் ரகுமான் கான் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.

‘‘பணமதிப்பு நீக்க நட வடிக்கையினால் ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் ஆபத்துகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வது, போராட்டம் நடத்துவது ஆகிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும்’’ என குழுவின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x