Published : 09 Jul 2017 09:51 AM
Last Updated : 09 Jul 2017 09:51 AM

நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் ஒரே நாளில் ரூ.228.92 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: மொத்தம் 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

நேற்று தமிழகத்தில் நடை பெற்ற தேசிய லோக் -அதாலத் மூலம் 1.12 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. இதன்மூலம் மனு தாரர்களுக்கு ரூ.228.92 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப் பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நாடு முழுவதும் தேசிய லோக் - அதாலத் இரு மாதங்களுக்கு ஒருமுறை மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப் பணிகள் ஆணைக்குழுக் கள் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 408 அமர்வுகள் அமைக்கப்பட்டது. இந்த அமர்வு களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்று நிலுவை வழக்குகளையும், போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், தொலைபேசி, வாகன விபத்து, நில ஆர்ஜிதம், விவா கரத்து, வருவாய், காசோலை மோசடி, வங்கி தொடர்பான வழக்குகள் என பலதரப்பட்ட வழக்குகளை விசாரித்தனர்.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 32 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் சென்னை உயர் நீதி மன்றத்தில் 113 வழக்குகளுக்கும், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் 51 வழக்குகளுக்கும், மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 873 நிலுவை வழக்குகளுக்கும், 51 ஆயிரத்து 547 வழக்கு விசா ரணைக்கு முந்தைய வழக்குக ளுக்கும் தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரேநாளில் ரூ.228 கோடியே 92 லட்சத்து 47 ஆயிரத்து 298-ஐ பாதிக் கப்பட்டவர்களுக்கும், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கும் இழப்பீடாக வழங்க உத்தர விடப்பட்டது என மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப் பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர்அகமது தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத் தில் நடந்த லோக் அதாலத்தில் நீதிபதி மணிக்குமார் மேற்பார் வையிட்டார். நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், ஆர்.மகாதேவன், வி.பாரதிதாசன், எம்.வி.முரளி தரன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் ஏழு அமர்வு களும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரது தலைமையில் இரு அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன. உயர் நீதிமன்றத்தில் நடந்த லோக்-அதாலத்தில் அரிதிலும் அரிதான பல குற்றவியல் வழக்குகளுக்கும் நீதிபதிகள் திறமையாக செயல்பட்டு தீர்வு கண்டதாக உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x