Published : 31 Jan 2017 02:18 PM
Last Updated : 31 Jan 2017 02:18 PM

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு: பேரவையில் மசோதா தாக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்ப தாவது:

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், மருத்துவ இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல் மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ளனர். ஆனால், கிராமங்களில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இல்லை. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற மாணவர்களுக்கு பொருளாதார வசதியும் இல்லை. எனவே, ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர் களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வாக உள்ளது. அதன் அடிப்படையில் உயர் கல்வி, தொழிற் கல்விக்கான ஒரே சீரான நுழைவுத் தேர்வு மாணவர் களுக்கு பெரும் சுமையாக இருக்கும். மத்திய இடைநிலை கல்வி குழுமத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் அடிப்படையி லேயே நுழைவுத் தேர்வு நடத்தப்படு கிறது. இது தமிழ்நாடு மேல் நிலைக் கல்வி வாரியத்தால் வகுத் துரைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து வேறுபட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கையை தொடர தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மட்டு மல்லாது மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கும்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவையும் பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், ‘மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங் களில் 50 சதவீதம் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீத முள்ள இடங்களுக்கு நுழைவுத் தேர்வு, மருத்துவப் பணி சார்ந்த அனுபவம், தமிழகத்தில் மருத் துவம், பல் மருத்துவ முதுநிலை படிப்புக்குரிய சேர்க்கைக்கான தேர்வு ஆகியவற்றின் அடிப்படை யில் ஒதுக்கப்படுகிறது.

அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வரை அரசுப் பணிக்காக தேவைப்படுகிறார்கள். அரசுப் பணியில் இல்லாத மருத்து வர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் கிராமங்கள் அல்லது மலைப் பகுதிகளில் மருத்துவப் பணியாற்ற வேண்டும்.

தற்போது மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் செய் துள்ளது. இதனால், தமிழக அரசு பின்பற்றி வரும் நடைமுறைகள் மாறக் கூடியதாக இருக்கும். இதனால் கிராம மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்கம் பாதிக்கப் படும். எனவே, மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை யில் தற்போதைய நடை முறையை தொடரும் வகையில் சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு சட்டம் போல..

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி பல லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்ற போராட்டம் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.

இதைப் பின்பற்றியே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x