Published : 31 Jan 2017 08:04 AM
Last Updated : 31 Jan 2017 08:04 AM

நிண்ணைக்காரையில் நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளியின் 80 வயது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது - நெகிழ்ச்சியான நினைவுகளை பரிமாறி கொண்டனர்



*



செங்கல்பட்டு அடுத்த மறை மலைநகர் நிண்ணைக்காரை அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில், 80-வயதுடைய முன்னாள் மாணவர்கள் கவுரவிக் கப்பட்டனர்.

செங்கல்பட்டு அருகே மறை மலைநகரை அடுத்த நிண்ணைக் காரை கிராமத்தில் 1916-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிராம பெரியவர்களால் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளி ஒன்று, தற்போது நடுநிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. இந்த பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையொட்டி நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

நிண்ணைக்காரை கிராமத்தைச் சேர்ந்த மா.விஜயகுமார் தலை மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், சிறப்பு அழைப்பாளர் களாக காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், உதவிக் கல்வி அலுவலர் இராஜசேகரன், மறைமலை நகர் காவல்நிலைய ஆய்வாளர் வடிவேல்முருகன், காட்டங்கொளத்தூர் உதவித் தொடக்கல்வி அலுவலர் பூங் கோதை, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் லதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனம், பாரம்பரிய விளையாட்டு ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. விழாவில் மாணவர் களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பள்ளி குறித்து சிறப்பு மலரும் வெளியிடப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்துகொண் டனர். இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 80 வயதுடைய முன்னாள் மாணவர்கள் 39 பேர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழச் செய்தது.

நிண்ணைக்காரை கிராமத்தைச் சேர்ந்த மா.விஜயகுமார் கூறியதாவது: உள்ளூர் கிராம மக்களின் முயற்சியாலும், உழைப்பாலும் இப்பள்ளி 25-03-1916 அன்று 5-ம் வகுப்பு வரையுள்ள ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டது. காயிரம்பேடு, கூடலூர், வல்லாஞ்சேரி, பொத்தேரி, கொருக்கன்தாங்கல், காட்டாங்கொளத்தூர் போன்ற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு கல்வி கற்க வந்தனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.

8.6.1977-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மறைமலை நகரில் உள்ள பல தொழில் நிறுவனங்களிடம் இருந்து உதவி பெற்று பள்ளிக்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை முன்வரவேண்டும். கட்டிடம், சுற்றுச்சுவர், சமையல் அறை அமைக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x