Published : 09 Jul 2017 10:16 AM
Last Updated : 09 Jul 2017 10:16 AM

‘நாட்டைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும்’

நாட்டைப் பாதுகாக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன் கூறினார்.

கோவை உப்பிலியபாளையத் தில் தியாகி முத்துவின் 64-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் கே.சுப்பராயன் பேசியதாவது: இந்தியாவின் பாரம்பரியத் தொழில் கள் அழிந்து, பன்னாட்டு நிறுவனங் களின் ஆதிக்கம் தொடர்கிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தவறான நடவடிக்கைகளால், அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சுமார் 50 சதவீத விவசாயம் நொறுங்கிவிட்டது. மீதமுள்ள விவசாயிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் தொழிலும், விவசாயமும் அழியும் சூழலில், அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தேர்தலின்போது பாஜக கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? பாஜகவுக்கு நிதி அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே தற்போதைய மத்திய ஆட்சி செயல்படுகிறது.

அரசியல் சாசனத்தைப் புறக்கணித்துவிட்டு, மனு தர்மத்தை சட்டமாக்க பாஜக முயற்சிக்கிறது. அந்தக் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில், மத்தியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடிக்கிறார்கள். புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்தவர். இது ஜனநாயகத்துக்கு விரோதமாகும். நாட்டைப் பாதுகாக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

முன்னதாக, தியாகி முத்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் திறந்து வைக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x