Published : 16 Sep 2016 05:08 PM
Last Updated : 16 Sep 2016 05:08 PM

நாடு முழுவதும் நதிநீர் இணைக்கப்படும் வரை ஓயமாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த்

100 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம்- தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:

''100 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம்- தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று விஜயகாந்த் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நிச்சயம் நதிநீர் இணைப்பு நடக்கும் வரை தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியா முழுக்க நடக்கும்வரை நதிநீர் இணைப்பு என்ற உறுதியில் இருந்து ஓயமாட்டோம்.

சிறுவாணியில் அணைகட்டுவதை எதிர்த்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடைபெறும்'' என்று பிரேமலதா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x