Published : 06 Jan 2015 10:30 AM
Last Updated : 06 Jan 2015 10:30 AM

தொழிலாளர் நல நிதி 31-ம் தேதிக்குள் செலுத்த அறிவிப்பு

2014-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டுமென தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972-ன்படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக் கப்பட்டது. அதன்மூலம் தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நல நிதிச்சட்டம் 2(டி)-ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங் களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பங்குத் தொகை செலுத்த வேண்டும்.

தொழிலாளரின் பங்கான 7 ரூபாயை அவர்களது டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, அத்துடன் வேலையளிப்பவர் பங்காக ரூ.14 சேர்த்து ஆக மொத்தம் ரூ.21 வீதம் தொழிலாளர் நல நிதிக்கு பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி செலுத்த ஊதிய உச்சவரம்பு ஏதும் இல்லை.

வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவர். இதை செலுத்தத் தவறினால் அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, 2014-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையை ஜனவரி 31-ம் தேதிக்குள், ‘செயலாளர், தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு The Secretary, Tamil Nadu Labour Welfare Board என்ற பெயருக்கு வங்கி வரைவோலை மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x