Published : 31 May 2016 08:16 AM
Last Updated : 31 May 2016 08:16 AM

தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சி சார்பில் தொழிற்பயிற்சி நிலை யம் செயல்பட்டு வருகிறது. அதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கணினி இயக்குபவர், குழாய் பொருத்து நர், பொருத்துநர், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர், மின் பணியாளர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுது பார்ப்பவர் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் பயின்ற மாணவர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள், ‘மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், நடிப் பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, சென்னை- 14’ என்ற முகவரியில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூன் 20-ம் தேதிக்குள் அதே முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜூன் 23-ம் தேதி காலை 10 மணிக்கு அதே முகவரியில் கலந்தாய்வு நடைபெறும். அதில் பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். வயது வரம்பு 15 முதல் 40 வயது வரை.

சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். அவர்க ளுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித்தொகை, இலவச மடிக் கணினி ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x