Published : 28 Jun 2016 09:05 AM
Last Updated : 28 Jun 2016 09:05 AM

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக மக்களின் கருத்தை கேட்டுப் பெற வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மேடை வலியுறுத்தல்

பொதுப்பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளி யிட்டது. நாடு முழுவதும் இது தொடர்பாக கருத்துக் கேட்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற் றோர்கள், ஆசிரியர்களிடம் பேசியபோது, பெரும்பாலா னோர் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களுக்கு தெரியாது என்றுதான் தெரிவித்தனர். அப்படி யானால், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட வர்கள் யார்? எங்கு கூட்டங்கள் நடைபெற்றன? தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என்ன? என்ற தகவல் களை அரசு வெளியிட மறுக்கிறது.

திரட்டப்பட்டதாக கூறப்படும் கருத்துகளை தொகுத்து டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலை மையிலான குழு அறிக்கை அளித் துள்ளது. இந்த அறிக்கை, பொதுமக்கள் பார்வைக்காக இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையைத் தயாரித்த குழுவில் இடம்பெற்றி ருந்தவர்களில் 4 பேர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். ஒரே ஒருவர் மட்டுமே கல்வியாளர்.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடிய அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த அறிக்கையை கல்வியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். மேலும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உடனடியாக இந்த அறிக்கைய வெளியிட்டு ஆசிரியர்கள், மாணவப் பிரதிநிதி கள், கல்வியல் செயற்பாட்டாளர் களின் ஆலோசனையைப் பெற்ற பிறகுதான் புதிய கல்விக் கொள் கையின் வரைவு தயார் செய்ய வேண்டும். மேலும், அனைவரின் கருத்தையும் அறிந்த பிறகு, இந்த அறிக்கை மீதான கருத்தை மத்திய அரசிடம் மாநில அரசு தெரிவிக்க வேண்டும்.

மேலும், டி.எஸ்.ஆர்.சுப்பிர மணியன் அறிக்கையின் நகலை பொதுமக்கள் படிக்கவும், கருத்து தெரிவிக்கவும் ஏதுவாக www.samacheerkalvi.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x