Published : 08 Jun 2016 08:32 AM
Last Updated : 08 Jun 2016 08:32 AM

தொல்காப்பியர் விருதுக்கு பேராசிரியர் சோ.ந.கந்தசாமி தேர்வு: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தொல் காப்பியர் விருது பேராசிரியர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப் படுகிறது.

இது தொடர்பாக அந்நிறுவ னம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதை கடந்த 2005 முதல் வழங்கி வருகிறது. கி.பி.600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம்,மொழியியல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல் வேறு துறைகளில் ஆய்வுகள் செய்து தமிழுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் சிறந்த அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2013-14-ம் ஆண்டுக்கான தொல் காப்பியர் விருது பேராசிரியர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப் படுகிறது. இவ்விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இலக்கண, இலக்கிய ஆய்வு களில் புலமை பெற்ற சோ.ந.கந்த சாமி, 45 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங் களில் ஆய்வுப்பணி மற்றும் கல்விப்பணி ஆற்றியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ், வடமொழி, பாலி, பிராகிருதம், இந்தியில் புலமை பெற்றவர். தொல்காப்பியத் தெளிவு, தமிழிலக்கணச் செல்வம், தெய்வச்சிலையார் உரைத்திறம், செவ்வியல் இலக்கிய ஆய்வுகள், குறுந்தொகை ஆய்வுகள் உள் ளிட்ட செவ்வியல் இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டுள் ளார். மேலும், உலகத்தமிழ் இலக்கிய வரலாறு, குறுந்தொகை திறனாய்வு உள்ளிட்ட நூல்களும் இவர் எழுதியவை. கடந்த 2014 முதல் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்காப்பியர் இருக்கையின் மதிப்புறு பேராசிரியாக உள்ளார்.

இளம் அறிஞர் விருதுகள்

2013-14ம் ஆண்டுக்கான 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியர்களுக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள், உல.பால சுப்பிரமணியன், கலை.செழியன், சோ.ராஜலட்சுமி, த.மகா லட்சுமி, சவு.பா.சாலா வாணி ஆகியோ ருக்கு வழங்கப்படுகிறது. இளம் அறிஞர் விருதுடன், ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இவ் விருதுகள் குடியரசுத் தலைவரால் அவரது மாளிகையில் நடக்கும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x