Published : 30 Dec 2016 10:06 AM
Last Updated : 30 Dec 2016 10:06 AM

தூத்துக்குடியில் தனியார் மூலம் ரூ. 3,514 கோடியில் 525 மெகா வாட் அனல்மின் நிலையம்: 2019-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே ரூ. 3,514 கோடி மதிப்பீட்டில் 525 மெகா வாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தை, எஸ்இபிசி என்ற தனியார் நிறுவனம் அமைக்கிறது.

அனல்மின் நிலையம் அமைக்க குத்தகை அடிப்படையில் நிலம் வழங்கவும், கப்பல் தளம் அமைக்க சலுகை வழங்கவும் துறைமுக நிர்வாகத்துக்கும், அந்த நிறுவனத் துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையைச் சேர்ந்த எஸ்இபிசி பவர் லிமிடெட் நிறு வனம் சார்பில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்குத் தேவையான நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்க வும், நிலக்கரியை கையாள துறை முகத்தில் கப்பல் தளம் அமைக்க வும் வ.உ.சி. துறைமுக நிர்வாகம் மற்றும் எஸ்இபிசி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத் திடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துறைமுக அலுவலகத்தில் நடை பெற்றது.

வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திர போஸ் மற்றும் எஸ்இபிசி நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் சக்கா பெடா சுப்பையா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஒப்பந்த நகல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கப்பல் தளம் அமைப்பதற்கான சலுகை ஒப்பந்தத்தில் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலை வர் சு.நடராஜன் மற்றும் எஸ்இபிசி நிறுவன துணைத் தலைவர் பி.சத்ய குமார் ஆகியோர் கையெழுத்திட்டு, நகல்களை பரிமாறிக் கொண்டனர்.

எஸ்இபிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட உள்ள 525 மெகா வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் ரூ. 3,514 கோடி மதிப் பீட்டில் நிறுவப்படவுள்ளது. இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்கு 36.81 ஹெக்டேர் நிலம் துறைமுகம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியைக் கையாள்வதற்காக கேப்டிவ் கப்பல் தளம் கட்டுமானத்துக்காக 180 X 15 மீ. அளவிலான நீர் பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. இந்த தளத்தை எஸ்இபிசி நிறுவனம் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் அமைக் கிறது.

அனல்மின் நிலையத்தின் செயல் பாட்டுக்கு ஆண்டுக்கு 1.5 மில்லி யன் டன் நிலக்கரி, துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தொலைவுக்கு கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புதிய அனல்மின் நிலையம் வரும் 2019-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x