Published : 09 Jul 2017 10:29 AM
Last Updated : 09 Jul 2017 10:29 AM

துணைவேந்தர் நியமனத்தில் தகுதி, தேர்வுக் குழு தொடர்பாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தில் தகுதி, தேர்வுக் குழு அமைப்பது தொடர்பான புதிய நடைமுறைகள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் சட்டப்பேர வையில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளன.

தமிழகத்தில் உள்ள சென்னை, அண்ணா, மதுரை காமராசர், அண்ணாமலை, அழகப்பா உள் ளிட்ட 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற் கான தேர்வுக் குழு அமைப்பது, துணைவேந்தர்களின் தகுதி தொடர்பான எந்த விதிகளும் பல்கலைக்கழக சட்டங்களில் வகுக்கப்படவில்லை. இதனால், துணைவேந்தர்கள் நியமனத்தில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதைப் போக்கும் வகையில், ஒரு துணைவேந்தரின் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்வுக் குழுவை அமைப்பது, குழுவில் இடம்பெறுவோரின் தகுதிகள், துணைவேந்தரின் தகுதிகள் தொடர் பாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித் திருந்தார்.

இதன்படி, 12 பல்கலைக்கழக சட்டங்களிலும் திருத்தம் செய்வதற் கான திருத்தச் சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் அமைச்சர் நேற்று அறிமுகம் செய்தார். முன்னதாக, இது தொடர்பாக கடந்த மே 27-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய திருத்தத்தின்படி, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு முதன்மைச் செயலர் அளவில் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலர், ஆட்சிக்குழுவால் நியமிக்கப்படும் சிறந்த கல்வி யாளர் ஆகியோர் இருப்பர். கல்வியாளர் என்பவர் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தராகவோ அல்லது 10 ஆண்டுகள் பேராசிரியராகவோ பணியாற்றிய அனுபவம் பெற்ற வராக இருக்க வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன இயக்குநராகவோ, தலைவராகவோ இருக்கலாம்.

துணைவேந்தருக்குப் பரிந் துரைக்கப்படுபவர், உயர்ந்த தகுதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றுடன் பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வி யாளராக இருக்க வேண்டும். மாநில அரசால் குறிப்பிடப்படும் கல்வித் தகுதி, அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

துணைவேந்தர் பதவி காலியாகுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தேர்வுக் குழு உறுப் பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்பணி 4 மாதங்களுக்கு முன் முடிய வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்கும் நடை முறையை 4 மாதங்களுக்கு முன் தொடங்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களில் ஆளுநருக்கு தன் பரிந்துரையை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதில் சென்னை பல்கலைக் கழக சட்டத்திருத்தம் மட்டும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x