Published : 06 Oct 2016 09:18 AM
Last Updated : 06 Oct 2016 09:18 AM

தீபாவளி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

தீபாவளி போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கார் மற்றும் இதர வாகனங்களுக்கும் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் அரசு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதேபோல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுவதால், ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி சாலை உட்பட மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கிவிடுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே, போக்குவரத்து மற்றும் போலீஸ் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சில இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு:

தீபாவளி பண்டிகையின்போது மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகு பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வரும் 26, 27 மற்றும் 28-ம் தேதியில் இந்த மாற்றங்கள் செய்யப்படும்.

முன்பதிவு செய்யும் பேருந்து கள் இயக்கப்படும் இடங்கள்:

செங்குன்றம் வழியாக ஆந் திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகரில் (மேற்கு) உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழி யாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சா வூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்து களும் (அரசு விரைவு போக்கு வரத்து கழகம் உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத் தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர் களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப் படும்.

மேற்கண்ட தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங் களில் சென்று பயணம் மேற் கொள்ளலாம். இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வழித்தட மாற்றங்கள்

கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் நிரம்பிய பேருந்து கள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்த மல்லி, நசரத்பேட்டை, வெளி சுற்றுச் சாலை வழியாக வண்ட லூர் செல்ல வழிவகை செய்யப் பட்டுள்ளது.

முன்பதிவின்போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று, அங்கு தாங் கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு பேருந்துகளில் பயணம் மேற் கொள்ளலாம்.

அனைத்து பேருந்து நிலையங் களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும்.

வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர், செங்கல்பட்டு வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

இவ்வாறு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள் தொடர் பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சிறப்பு பேருந்துகளின் பட்டியல் தயாராகிவிட்டது. தற்போது, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாட்களில் சிறப்பு பேருந்துகளின் பட்டியலை வெளியிடுவோம். 26-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x