Published : 30 Jan 2017 12:06 PM
Last Updated : 30 Jan 2017 12:06 PM

தி இந்து கிரியேஷன் எக்ஸ்போ நுகர்வோர் பொருட்காட்சிக்கு வரவேற்பு

சேலம் 3 ரோடு ஜவஹர் மில் திடலில் நடைபெறும் 'தி இந்து' மற்றும் 'கிரியேஷன் எக்ஸ்போ' நுகர்வோர் உங்கள் சாய்ஸ் பொருட்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

'தி இந்து' மற்றும் கிரியேஷன் எக்ஸ்போ சார்பில் நுகர்வோர் உங்கள் சாய்ஸ் பொருட்காட்சி மற்றும் எல்ஜி எலட்ரானிக் பட்ஜெட் சேல் திருவிழா 3 ரோடு ஜவஹர் மில் திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது. ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, பொருட்காட்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளையாட்டு அம்சங்கள் குழந்தைகளுக்கு பிடித்திருந்ததால் பெற்றோர் மகிழ்ச்சி யடைந்தனர். மேலும், பொருட்காட்சியில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா, அங்கு வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விதவிதமான உணவு வகைகள், ருசியாக கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஹூண்டாய், நிஸான், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவ னங்களின் கார்களும், பிரபல நிறுவனங் களின் டூ வீலர்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புதிய வாகனங் களுக்கு ஆர்டரும் கொடுத்துச் சென்றனர். எலக்ட்ரானிக் பட்ஜெட் சேல் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான எலட்ரானிக் பொருட்களை மக்கள் ஆர்வத் துடன் விசாரித்து வாங்கிச் சென்றனர்.

பொருட்காட்சி குறித்து கிரியேஷன் எக்ஸ்போ உரிமையாளர் தேசாய் கூறிய தாவது:

சேலத்தில் மிகப்பெரிய முதலீட்டில் நுகர்வோர் உங்கள் சாய்ஸ் எக்ஸ்போ மற்றும் எல்ஜி ஷாப்பி எலக்ட்ரானிக் பட்ஜெட் சேல் திருவிழா இதுவாக இருக்கும். எல்சிடி, எல்இடி டிவி, பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள், கார், டூ வீலர் போன்றவை வாங்குவதற்கு பொருட்காட்சியிலேயே லோன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு வசதியாக இருக்கிறது. கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு ரைட்வின் மீடியா சார்பில் நடத்தப்படும் பரிசு மழை போட்டியில் பலவித பரிசுகள் கிடைப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x