Published : 08 Nov 2016 09:37 AM
Last Updated : 08 Nov 2016 09:37 AM

தி இந்து கட்டுரையை ஆதாரமாக வைத்து வழக்கு: பாரம்பரிய கலைகள் வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

‘தி இந்து’ கட்டுரையை ஆதாரமாக வைத்து தமிழகத்தில் கலைகளை பாதுகாக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், கலை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கையை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

மதுரை உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் எம்.வெயில்கனிராஜ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனு: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடுப்பக்கத்தில் 16.10.2015 அன்று ‘திருவிழா ஜோராக நடக்கிறது, சாமிதான் அனாதை ஆயிடுச்சு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. அந்தக் கட்டுரையில், “தமிழகத்தில் கும்மியாட்டம், சாமி யாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடி யாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் இருந்துள்ளன.

போதிய முக்கியத்துவம்

நாட்டுப்புற கலைஞர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. வருமானம் இல்லாமல் பசியால் வாடுகின்றனர். இந்த நிலைமைக்கு நாட்புப் புற கலைகளையும், கலைஞர் களையும் அரசு கண்டுகொள்ளா மல் இருப்பதும் ஒரு காரணம். நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நாட்டுப்புற கலை ஞர்களை பாதுகாக்கவும் உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசார ணைக்கு வந்தது. கலை, பண்பாட் டுத் துறை உதவி இயக்குநர் ஏ.குணசேகரன் ஆஜராகி, “தமிழ கத்தில் கலைஞர்களுக்கு முறை யாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “நாட் டுப்புற கலைஞர்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்கப்பட்டி ருப்பதாக அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த வாரி யத்தில் 9 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். 4 ஆண்டுகளாக உறுப் பினர்கள் பணியிடம் காலியாக உள்ளது. கலையை நம்பியுள்ள வர்களின் வாழ்க்கை கேள்விக்குறி யாக உள்ளது. நாகரிகத்துக்கான விஷயங்கள் அனைத்தையும் கலைகள் உள்ளடக்கியுள்ளன.

தற்போது நாட்டில் பாரம்பரி யமான விஷயங்கள் மறைந்து வருகின்றன. குழந்தைகளுக்கு கண்காட்சியில்தான் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை காட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அம்மி, ஆட்டுக்கல்கூட யாருக்கும் தெரியாமல் போய்விடும். கலை, பண்பாட்டுக்கு உரிய வாய்ப்பு களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நலிவடையும் கலைஞர் களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

சென்னையில் பரதம், கர்நாடக சங்கீதத்தை வளர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கரகம், பறைக்கு அந்த வாய்ப்பு கள் இல்லை. கலம்காரி ஓவியம் கும்பகோணம் பக்கம் இருந்து வந்த கலையில் ஒன்று. சர்வ தேச கலை வரைபடத்தில் கலம் காரி ஓவியத்துக்கு சிக்கன நாயக்கன்பட்டி கிராமம் இடம் பெற்றுள்ளது. இதுமாதிரியான அற்புதமான கலைகளை வெளி நாட்டினர் இந்தியா வந்து கற்றுச் செல்கின்றனர். ஆனால், நம்மவர்களிடம் இந்த கலைகளை ஊக்கப்படுத்துவதில்லை. நாகரிகத்தின் அடையாளங்களான கலைகள் அழியவிடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” என்றனர்.

பின்னர், “தமிழகத்தில் பாரம்பரி யத்தின் அடையாளங்களாக உள்ள கலைகளை வளர்க்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன என்பது தொடர்பாக கலை, பண்பாட்டுத் துறை வரும் 18-ம் தேதி விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x