Published : 28 Jun 2016 08:14 AM
Last Updated : 28 Jun 2016 08:14 AM

தில்லைகங்கா நகர் சுரங்கப் பாதையில் நிற்காமல் பெருக்கெடுக்கும் ஊற்றுநீர்: ‘பாசியால்’ நிலை தடுமாறும் வாகன ஓட்டிகள் - தொடரும் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பலநூறு அடிகள் தோண்டினாலும் தண்ணீர் வருவதில்லை. ஆனால், தோண்டாமலேயே ஊற்றுநீர் பெருக்கெடுக்கிறது தில்லைகங்கா நகர் சுரங்கப் பாதையில். எவ் வளவு முயன்றும் இதை சரிசெய்ய முடியாததால், சாலையில் பாசி பிடித்து, வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் பரிதாபம் தொடர்கிறது.

மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதி களை நங்கநல்லூர், வேளச்சேரி, உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப் பாக்கம் போன்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமாக தில்லைகங்கா நகர் உள்ளது. பழவந்தாங்கல், பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு மிக அருகே அமைந்துள்ள இப்பகுதியில் 45-க்கும் மேற்பட்ட தெருக்கள், 6 பிரதான குறுக்கு சாலைகள் உள்ளன. அதிக அளவில் குடியிருப்புகளைக் கொண்ட பகுதி இது.

மின்சார ரயில் போக்குவரத்தும், சாலைப் போக்குவரத்தும் குறுக் கிடக்கூடாது என்பதற்காக தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம், பழவந் தாங்கல், மீனம்பாக்கம், பல்லா வரம் என வரிசையாக சுரங்கப் பாதைகள் உள்ளன.

தொடர் மழை பெய்தால் இந்த சுரங்கப் பாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிடும். இப்பகுதியினர் வேளச்சேரி அல்லது கிழக்கு தாம்பரம் சுற்றிக்கொண்டுதான் ஜிஎஸ்டி சாலைக்கு வரமுடியும்.

ஆனால், மழை பெய்யாத காலங்களில்கூட தில்லைகங்கா நகர் சுரங்கப் பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கியபடியே உள்ளது. இங்கு இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளனர் என புள்ளிவிவரம் கூறும் மக்கள், இந்த சுரங்கப்பாதையில் நிற்காமல் பெருக்கெடுத்து ஓடும் ஊற்றுநீர்தான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுசம்பந்தமாக தில்லைகங்கா நகர் பகுதியை சேர்ந்த சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கட்டிட ஒப்பந்ததாரர் ஜி.வெங்க டேசன்:

ஆரம்பத்தில் இந்த சுரங்கப்பாதையின் பக்கவாட்டுப் பகுதிகளிலும் ஊற்றுநீர் பெருக் கெடுத்தது. சிரமப்பட்டு அதை அடைத்துவிட்டனர். தற்போது சாலையிலேயே 3 முதல் 4 இடங் களில் ஊற்றுத்தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓரங்களில் பாசி படிந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் வழுக்கி விழுந்து தடுப்புச்சுவரில் மோதி பரிதாபமாக இறக்கின்றனர்.

இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாகவும், நீர் சுவையாகவும் இருந்ததால்தான் இப்பகுதிக்கே தில்லைகங்கா நகர் என பெயர் வந்தது. இப்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

முன்னாள் மத்திய அரசு அதிகாரி டி.வானமாமலை:

ரயில் பாதைக்கு கிழக்கே உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜிஎஸ்டி சாலைக்கு எளிதில் வருவதற்கேற்ப பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் இருந்தது. அது செயல்பாட்டுக்கு வரவில்லை. சுரங்கப் பாதையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில்தான் ஏரி உள்ளது. ஆனால், ஏரிக்கு செல்லும் எல்லா கால்வாய்களும் அடைபட்டு, ஏரி சுருங்கி வறண்டுபோய் கிடக்கிறது. மழைக்காலத்தில் பழவந்தாங்கல், தில்லைகங்கா நகர், ஆதம்பாக்கம் சுரங்கப் பாதைகளில் தேங்கும் தண்ணீரை ஏரிக்கு திருப்பிவிட்டாலே இப்பகுதியின் தண்ணீர் கஷ்டம் தீரும்.

திமுக கவுன்சிலர் ப.முத்து:

சுரங்கப் பாதையில் இரவு நேரத்தில்தான் அதிக தண்ணீர் வெளியேறுகிறது. இங்கு வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைத்தாலே வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை குறையும்.

தவிர, சுரங்கப் பாதையின் வளைவும் ஆபத்தாக உள்ளது. இதேபோல, வேளச்சேரி பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பாலத்துக்கு கீழே கருமாரியம்மன் கோயில் சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. ஆபத்தான இந்த இடங்களை விபத்து பகுதியாக அறிவித்து வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத் துறை முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x