Published : 31 May 2016 08:03 AM
Last Updated : 31 May 2016 08:03 AM

தாம்பரம் அடுத்த வேங்கடமங்கலத்தில் குறைந்த மின் அழுத்தம்: வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர், மோட்டார் பழுது - அதிக செலவு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு

தாம்பரம் அடுத்த வேங்கடமங் கலத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணத்தால் வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் பழுதடைவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் அடுத்த வேங்கட மங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் நகர், அம்பேத்கர் நகர் ஒன்று முதல் 6 தெரு மற்றும் அகரம்தென் சாலை பகுதிக்கு பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த பகுதியில் ஆண்டுக்கு சுமார் நூறு வீடுகள் புதிதாக உருவாகி வருகின்றன. எனவே மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பேருந்து நிலையத்தில் உள்ள பழைய டிரான்ஸ்பார்மரிலிருந்துதான் மின் பகிர்மானம் செய்யப்பட்டு வந்தது. இதனால் மின் விநியோகம் அடிக்கடி தடைப்பட்டது.

இதையடுத்து அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை புதிதாக அமைத்தால் தான் மின் பகிர்மான சரியான அளவில் இருக்கும். அதனால் புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மின்வாரியத்துக்கு கோரிக்கை களை வைத்தனர். அதனை ஏற்ற மின்வாரியம் அம்பேத்கர் நகரில் மேலும் ஒரு டிரான்ஸ்பார்மரை அமைத்தது. அது பழுதுநீக்கப்பட்ட பழைய டிரான்ஸ்பார்மர் என்பதால் வீடுகளுக்கு குறைந்த அழுத்தம் உள்ள மின்சாரமே கிடைத்தது. இதனால் வீடுகளில் உள்ள மின் மோட்டார்கள், மின் அடுப்பு, டிவி உள்ளிட்ட பொருட்கள் பழுதாகிவிடுகின்றன.

சேலையூரில் மின்தடை

இதேபோல் சேலையூர் கேம்ப் ரோடு, ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகள், சிட்லபாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை ஏற்பட்டதும் சேலையூர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், ஊழியர்கள் யாரும் தொலைபேசியை எடுப்பதில்லை. அதனால் எப்போது மின் தடை ஏற்படும், எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுபற்றி வேங்கடமங்கலம் மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சீரான மின் விநியோகம் இல்லை. குறைந்த மின் அழுத்தத்தால் இரவில் லைட்கள் மங்கலாக எரிகிறது. பேன் மெதுவாக சுற்றுகிறது. இரவில் தூங்க முடியவில்லை. டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் பழுதாகிவிடுகின்றன. மோட்டார் போட்டு தண்ணீர் கூட எடுக்க முடிய வில்லை. அம்பேத்கர் நகர் மூன்றா வது தெருவில் புதிதாக அமைக்கப் பட்ட புதிய டிரான்ஸ்பார்மரில் மோசடி நடந்துள்ளது. புதிய டிரான்ஸ்பார்மரை அமைக் காமல், பழுதடைந்த பழைய டிரான்ஸ்பார்மரை அமைத்துவிட் டனர். மின் இணைப்புகள் அதிகரித்து வருவதால், லோடு தாங் காமல் டிரான்ஸ்பார்மர்களும் அடிக் கடி பழுதாகின்றன. அதனால் மின் இணைப்புகளுக்கு ஏற்ப, கூடுதல் திறன் உள்ள டிரான்ஸ்பார்மரை அமைக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x