Published : 16 May 2016 07:24 AM
Last Updated : 16 May 2016 07:24 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம்

தமிழக தேர்தல்:73.76% வாக்குப்பதிவு

தமிழகத்தில் 73.76% வாக்குகள் பதிவாகின என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை நிறைவுபெற்றது.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவும், நகர்ப்புறங்களில் குறைந்த அளவும் வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

6.01 PM: தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

5.55 PM: மாலை 5 மணி நிலவரப்படி விருதுநகர் மாவட்டத்தில் 72.13% வாக்கு பதிவாகியுள்ளது.

5.30 PM: கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 71.12% வாக்கு பதிவாகியுள்ளது.

5.20 PM: புதுச்சேரி யூனியனில் ஒட்டுமொத்தமாக மாலை 5 மணி நிலவரப்படி 81.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 81.94 சதவீத வாக்குகளும், காரைக்காலில் 76.31 சதவீத வாக்குகளும், மாஹேயில் 75.25 சதவீத வாக்குகளும், ஏனாமில் 88.5 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.

5.15 PM: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநில தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார். மழை காரணமாக மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

4.48 PM: புதுச்சேரியில் 4 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும் 71.34% வாக்கு பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் 72.38 சதவீதமும், காரைக்காலில் 66.28 சதவீதமும், மாஹேயில் 64.83 சதவீதமும், ஏனாமில் 77.63 சதவீதமும் பதிவானது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 71.34சதவீதமும் வாக்கு பதிவானது.

4.45 PM: ஒட்டப்பிடாரம் கவர்னகிரி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர்.

4.15 PM: மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை - லக்கானி.

3.55 PM: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

3.20 PM: 3 மணி நிலவரப்படி அரியலூர் தொகுதியில் 72%. ஜெயங்கொண்டான் தொகுதியில் 68%.

3.15 PM: கேரளாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.89% வாக்குப்பதிவு.

3.09 PM: புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும் 68.6% வாக்கு பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் 69.38 சதவீதமும், காரைக்காலில் 62.6 சதவீதமும், மாஹேயில் 63.81 சதவீதமும், ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது.

2.45 PM: சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்.

2.35 PM: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கருப்புபூவன்பட்டி கிராமத்தில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வதில் திமுக, அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

2.15 PM: புதுச்சேரியில் மதியம் 2 மணி நிலவரப்படி 54.64% வாக்குப்பதிவு. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் புதுச்சேரியில் 55.72 சதவீதமும், காரைக்காலில் 48.9 சதவீதமும், மாஹேயில் 50.12 சதவீதமும், ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 54.64 % வாக்கு பதிவாகியுள்ளது.

2.00 PM: சென்னை சைதாப்பேட்டையில் திருநங்கைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இடம்: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளி.

13.50 PM: அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் ஓட்டுப்போட்டு வெளியே வந்த மூதாட்டி கீழே விழுந்து பலி.

13.45 PM: மதியம் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 50.43% வாக்கு பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 43.88% வாக்கு பதிவாகியுள்ளது.

13.40 PM: மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவை நீட்டிப்பது குறித்து 3 மணிக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும்: லக்கானி

13.35 PM:தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 42.1% வாக்குப்பதிவு- ராஜேஷ் லக்கானி தகவல்

13.00 PM: திருப்பூர் மாவட்டம் வடசின்னேரிபாளையத்துக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் செல்வராஜ் (54) பணியில் போது மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் இறந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

12.40 PM: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு சிறப்பாக பணி செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இதனால் மக்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிப்பார்கள்" என்றார். விரிவான செய்திக்கு: > | புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங். ஆட்சி அமையும்: ரங்கசாமி |



12.35 PM: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

12.10 PM: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.

12.00 PM: தருமபுரி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரம் 44% வாக்குப்பதிவு.

11.55 AM: கனமழையையும் பொருட்படுத்தாமல் மதுரையில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி மதுரையில் 28.05% வாக்குப்பதிவு.

11.40 AM: சென்னையில் வழக்கத்தைவிட அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி தகவல். விரிவான செய்திக்கு: | >சென்னையில் வழக்கத்தைவிட அதிகமான வாக்குப்பதிவு: லக்கானி |

11.35 AM: தமிழகத்தில் காலை 11 மணி வரை 25.2% வாக்குப்பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் காலை 11 மணி நேர நிலவரப்படி 27.51 % வாக்குகள் பதிவு. கேரளாவில் 28.46% வாக்குப்பதிவு.

11.30 AM: சென்னை ராயபுரம் 53-வது வார்டில் மின்வெட்டு ஏற்பட்டதால். வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

11.25 AM: திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்து தமிழக மக்களை பணத்துக்கு அடிமையாக்கி விட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

11.15 AM: கர்நாடக மாநிலத்திலிருக்கும் தமிழக வாக்காளர்கள் இன்று காலை பெருமளவில் ஓசூர் வந்தனர். ஓசூரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப போதிய அளவு வாகனங்கள் இல்லாததால் ஓசூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

11.10 AM: கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, நாகப்படினம் பகுதிகளில் கனமமழை பெய்து வருவதால். இந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரத்தை தேவைக்கேற்ப அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கோனி தெரிவித்துள்ளார்.

திருச்சி மன்னச்சநல்லூர் வாக்குச்சாவடி. படம்: ஆர்.ராஜாராம்.

10.50 AM: நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

10.45 AM: ஜெயங்கொண்டம் அருகில் புதுகுடி கிராமத்தில் ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு செல்லும் போது இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஜெயகுமார் மனைவி வளர்மதி (38).

10.35 AM: முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சேடப்பட்டி ஆர்.முத்தையா மதுரை அவனியாபுரத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வந்துள்ளதற்கு காரணம் திமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி" என்றார்.

10.25 AM: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

10.10 AM: ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சென்னை மயிலாப்பூர் வாக்களித்த பின்னர் கனிமொழி தெரிவித்துள்ளார். > | திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி நம்பிக்கை |

படம்: எல்.சீனிவாசன்

10.00 AM: இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்: வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து. விரிவான செய்திக்கு | >தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?- ஜெயலலிதா கருத்து |

9.56 AM: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் சசிகலாவும் வாக்களித்தார்.

9.50 AM: அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரினார். விரிவான செய்திக்கு: > | அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தலுக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல் |

9.45 AM: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியைப் பிடிக்கும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

9.35 AM: புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்அதிக அளவில் பொழிந்தது. அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளடக்கியது) 13% வாக்குப்பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு : > | புதுச்சேரியில் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: 9 வரை 13% வாக்குப்பதிவு |

9.40 AM: சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

9.25 AM: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை. > | புதுச்சேரியில் காங். - திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: நாராயணசாமி நம்பிக்கை |

9.20 AM: காலை 9 மணி நிலவரப்படி கேரளாவில் 13.5% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.12 AM: காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 18.3% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.00 AM: தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்.

8.50 AM: தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக குஷ்பு குற்றச்சாட்டு. > | அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: குஷ்பு |

8.45 AM: நடிகர் ஜீவா சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தார்.

படம்: எல்.சீனிவாசன்.

8.35 AM: 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. விரிவான செய்திக்கு: > | 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் |

படம்: மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கம்.

8.30 AM: சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

8.25 AM: திருத்துறைப்பூண்டி வேலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாக்களித்தார்.

8.15 AM: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து.

8.10 AM: திண்டுக்கல் அவர்லேடி மெட்ரிக் பள்ளி, கடலூர் கந்தசாமி நாயுடு பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.

படம்: எம்.கோவர்த்தன்

7.55 AM: நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.

படம்: எல்.சீனிவாசன்.

7.51 AM: பணப் பட்டுவாடாவை தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த ஆணையம்- ப.சிதம்பரம் கருத்து. > | பணம் கொடுப்பதை தடுக்காதது தேர்தல் ஆணையத்தின் தோல்வி: ப.சிதம்பரம் |

7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

7.49 AM: மதுரையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ் வரிசையில் நின்று வாக்களித்தார். மதுரையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ்

7.45 AM: 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என ராஜேஷ் லக்கானி தகவல்.

7.40 AM: ஒசூரில் 131-வது வாக்குச்சாவடி மற்றும் நெல்லையில் 131-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

7.38 AM: மாநிலம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ள போது 2 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவை ரத்து செய்வது நியாயமான செயல் அல்ல. தேர்தல் ஆணையம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லை- சீமான். விரிவான செய்திக்கு: >| தமிழகத்தில் பணநாயகம் வெல்லக் கூடாது: சீமான் |

7.35 AM: சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

7.30 AM: வாக்களித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். விரிவான செய்திக்கு: > | திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?- கருணாநிதி பதில் |

7.20 AM: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்.

7.15 AM: சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்.

7.10 AM: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது மனைவியுடன் அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

7.05AM: நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

படம்: ம.பிரபு.

7.00 AM: தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் போட்டி யிடுகின்றனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டு மன்னார்கோவிலிலும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்திலும் களத்தில் உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந் தரராஜன் விருகம்பாக்கத்திலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரிலும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x