Published : 16 May 2016 07:08 AM
Last Updated : 16 May 2016 07:08 AM

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று பொதுத் தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

மாலை 6 மணி வரை நடக்கிறது; வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடக்கிறது.

தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவை பொதுத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் போட்டி யிடுகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டு மன்னார்கோவிலிலும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத் திலும் களத்தில் உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந் தரராஜன் விருகம்பாக்கத்திலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் கடலூரிலும் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. அங்கு 23-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மற்ற 233 தொகுதிகளின் 65,762 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழகத்தில் இன்றைய வாக்குப்பதிவில் 5.80 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,740 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை தெரிவித்து, உரிய அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி னால் வாக்குச்சாவடி, அத்தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

‘1950’ என்ற செல்போன் எண் ணுக்கு Q என பதிவு செய்து, இடை வெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால் வாக்குச் சாவடியில் அந்த நேரத்தில் எத் தனை பேர் வரிசையில் காத்திருக் கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

தேர்தலில் சுமார் 65 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய துணை ராணுவப் படையின் 300 கம்பெனிகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்களும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 6,640 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 1,223 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்ற மானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வாக்குச்சாவடி நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் 30 தொகுதி களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி களிலும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங் கள் அனைத்தும் பலத்த பாதுகாப் புடன் வாக்கு எண்ணும் மையங் களுக்கு கொண்டு செல்லப்படும். தமிழகம் முழுவதும் 68 மையங்களில் மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x