Published : 30 Dec 2016 09:49 AM
Last Updated : 30 Dec 2016 09:49 AM

தமிழகம், கர்நாடகத்தை மட்டும் குறிவைத்து வருமான வரி சோதனை நடத்துவது ஏன்?- மத்திய அரசு விளக்கம் அளிக்க சல்மான் குர்ஷித் கோரிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த நவ. 8-ல் கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலில் அறிவிக் கப்பட்டது. புழக்கத்தில் இருந்த 86% நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். மக்கள் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்காமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அரசு மக்களை குழப்பு கிறது. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என அமர்த்தியா சென் போன்றவர்கள் கருதுகின்றனர்.

50 நாட்களில் நிலைமை சீராகும் என மோடி அறிவித்த காலக்கெடு முடியவுள்ள நிலையில், பணத் தட்டுப்பாடு நீங்கவில்லை. எனவே, இதுவரை எவ்வளவு கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது? பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு எவ்வளவு? பாதிக்கப்பட்ட தொழில் கள், வாழ்வாதாரங்கள் எத்தனை? பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வேலையை, வருமானத்தை இழந்த வர்கள் எத்தனை பேர்? திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறியதா? திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த எடுக்கப்பட்ட முன்னேற்பாடு கள் என்ன? திட்டத்தை அறிவிக் கும் முன் ரிசர்வ் வங்கி, பொருளாதார நிபுணர்களின் ஏன் ஆலோசிக்கவில்லை? தமிழகம், கர்நாடகத்தை மட்டும் குறிவைத்து வருமான வரி சோதனை நடத்துவது ஏன்?

நவம்பர் 8-ம் தேதிக்கு முந்தைய 6 மாதங்களில் ரூ.25 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்கள், சொத்து வாங்கியவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள், மக்களின் கேள்வி களுக்கு பதிலளிக்க வேண்டிய மோடி ஓடி ஒளிந்துகொண்டார். பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள மத்திய அரசுக்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x