Published : 31 May 2016 08:13 AM
Last Updated : 31 May 2016 08:13 AM

தனியார் நிறுவன பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும்: அமைச்சரிடம் பால் முகவர்கள் மனு

தனியார் நிறுவனங்களின் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி முதல் வரின் தனிப்பிரிவிலும் அமைச்சரி டமும் பால் முகவர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.

சென்னையில் ஆவின் மட்டு மல்லாது திருமலா, ஆரோக்யா என பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்களும் விற்கப்படு கின்றன. ஆவின் பாலைவிட தனியார் நிறுவனங்களின் பால் விலை ஏற்கெனவே ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகமாக விற்கப் படுகின்றன.

இந்நிலையில், திருமலா நிறு வனம் நேற்று முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. விலை உயர்வு தொடர்பாக திருமலா பால் நிறுவன அதிகாரி ஈஸ்வரபாபுவிடம் கேட்ட போது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே, தனியார் பால் நிறுவனங்களை வரன்முறை படுத்த வேண்டும். தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக கொள்கை ரீதியாக முடிவெடுத்து அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி முதல்வரின் தனிப்பிரிவிலும், பால் வளத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனிடம் தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அச்சங்கத் தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறும்போது, ‘‘பால் கொள்முதல் விலையோ, வாகன எரிபொருள் விலையோ உயராத நிலையில் திருமலா நிறுவனம் பால் விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளி யிடும்போது, வழக்கமாக அதற்கான காரணம் தெரிவிக்கப் படும்.

இந்த முறை எந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தும். இது நுகர்வோரை பாதிக்கும். எனவே, இதில் தமிழக அரசு தலையிட்டு தனியார் நிறுவன பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x