Published : 30 Dec 2016 09:50 AM
Last Updated : 30 Dec 2016 09:50 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 528-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக அதிகரித்துள்ளதால், உள்ளூரில் தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 528-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 691-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 682-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x