Published : 08 Nov 2016 09:15 AM
Last Updated : 08 Nov 2016 09:15 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 குறைவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை திடீரென குறைந்துள்ளது. இதனால், சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.23,064-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும்போது, உள்ளூரிலும் விலை உயர்வு இருக்கும். இதற்கிடையே, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதால், தங்கத்தின் முதலீடு கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கம் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.23,064-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,883-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,916-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை கணிசமாக குறைந்ததால் நகை கடைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x