Published : 03 Jul 2017 07:49 PM
Last Updated : 03 Jul 2017 07:49 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு திங்கட்கிழமை ரூ.104 குறைந்து ரூ.21 ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது. சென்னையில் திங்கட்கிழமை 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.21 ஆயிரத்து 960க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 745க்கு விற்பனை ஆனது. இதுவே, ஞாயிற்றுக்கிழமை ரூ.2 ஆயிரத்து 758க்கு விற்கப்பட்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x