Published : 30 Dec 2016 07:03 PM
Last Updated : 30 Dec 2016 07:03 PM

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 648க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆங்கில புத்தாண்டு நெருங்கவுள்ளதால் உள்ளூரில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையில் உயர்வு ஏற்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 648க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 706க்கு விற்கப்பட்டது. இதுவே, வியாழக்கிழமை ரூ.2 ஆயிரத்து 691க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x