Published : 08 Nov 2016 08:17 AM
Last Updated : 08 Nov 2016 08:17 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களில் குறிப்பிட்ட அடையாளங்கள் இருந்தால் தகுதி நீக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுது வோருக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. விடைத்தாள்களில் மதம், முகவரி குறிப்பிட்டிருந்தாலோ கலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா பயன்படுத்தினாலோ விண் ணப்பதாரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய் யப்படுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதும் விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக் கும்போதும், தேர்வெழுதும் போதும் கடைபிடிக்க வேண்டிய தெளிவுரைகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விண்ணப்ப தாரர்களுக்கான திருத்தப்பட்ட தெளிவுரைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்பட்டன. மொத்தம் 53 பக்கங்கள் கொண்ட அந்த தெளிவுரைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தேர்வு எழுத தடை

தேர்வு அறையில் விண்ணப்ப தாரர்கள் அருகில் உள்ள தேர்வரின் விடைத்தாளைப் பார்த்து விடையளிப்பது, துண்டு தாளைப் பார்த்து எழுதுவது, இதர தேர்வர்களுடன் ஆலோசிப்பது, கண்காணிப்பாளரிடம் விடை கேட்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் கடுமையாக தடை செய்யப்படுகின்றன. மீறி யாரேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவதுடன் அவர்களின் விடைத்தாள்கள் தகுதி நீக்கம் செய்யப்படும். அத்தகைய விண்ணப்பதாரர்கள் எதிர்காலத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.

விடைத்தாள் திருத்துவோரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் எதுவும் குறிப்பிடக்கூடாது. கலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா பயன்படுத்தக் கூடாது. விடைத் தாளில் மதம் சம்பந்தப்பட்ட குறியீடு, பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற குறிப்பிட்ட அடையாளங்கள் இருந்தால் அது தகுதி நீக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x