Published : 06 Jan 2015 10:22 AM
Last Updated : 06 Jan 2015 10:22 AM

ஜெயலலிதா மீது புதிய சொத்துக் குவிப்பு வழக்கு: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

1996-க்கு பிறகு ஜெயலலிதா மற்றும் அவரை சேர்ந்தவர்கள் சேர்த்துள்ள சொத்து குறித்து புதிதாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிரு பர்களுக்கு ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக 1996-க்கு பிறகு நடந்த ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை ஆணை யத்தை அமைக்க வேண்டும். இந்தியாவில் முதல்வராக இருந்த ஒருவர் ஊழல் செய்த தற்காக தண்டிக்கப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்ட பெருமை ஜெயலலிதாவையே சேரும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வின் மேல்முறையீட்டு மனுவில், தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இயல்பான முடிவை எட்டுவதற்கு, அவரை இணைத்துக் கொள்வது முக்கியம். மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை அவர்தான் விளக்க வேண்டும். 1996-க்கு பிறகு ஜெயலலிதா, அவரது தோழி மற்றும் தோழியின் உறவினர்கள் சேர்த்த சொத்துகள் குறித்து இன்னொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

பசுமை வீடுகள் திட்டம், மின்சார வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளது. ஊழல்கள் குறித்த அறிக்கையை தயாரித்து ஆளுநரிடம் கொடுத்து, விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்துவோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தாது மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணி ஏற்படும் என்பது அவர்களுடைய கருத்து. பாஜக கூட்டணி தொடர்பாக அடுத்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும். அப்போதே எங்களுடைய முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x