Published : 30 Dec 2016 10:09 AM
Last Updated : 30 Dec 2016 10:09 AM

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாதாரண குடிமகனுக்குக்கூட உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் ரத்த உறவுகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சைக்கான அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் யாரிடம் பெற்றது. ஜெயலலி தாவின் ரத்த உறவுகளிடம் பெற்றதா? அல்லது தமிழக அரசிடம் பெற்றதா? என்பது குறித்து இன்றுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

சில வாரங்கள் மருத்துவ மனையில் இருந்தாலே நோயாளி யின் உடல் மெலிந்து எடை பெரு மளவில் குறைந்துவிடும். ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத் துவமனையில் இருந்தபோதும் அவரது உடல் மெலியவோ, எடை குறையவோ இல்லை என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான சூழலில் மரணமடைந்துள்ளார்.

உண்மையை அறிந்துகொள்ள

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இந்த உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டுமென்று தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் துடிக்கின்றனர். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அக்கட்சியினர் வழக்கு தொடர்ந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதுதொடர் பாக உயர் நீதிமன்றம் எழுப்பி யுள்ள வினாக்களுக்கு விடை அளிப்பதுடன், மக்களுக்கும் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஜெயலலிதா வின் இறப்பில் உள்ள மர்மங் களை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x