Published : 31 May 2016 09:03 AM
Last Updated : 31 May 2016 09:03 AM

ஜூன் 29-ல்எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக் கான சிறப்பு துணை பொதுத்தேர்வு ஜுன் 29-ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வுக்கு மாணவர்களும், தனித்தேர்வர்களும் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடை பெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர் வுக்கு விண்ணப்பித்து அதில் கலந்துகொள்ளாதவர்கள் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு விண் ணப்பிக்கலாம்.

இத்தேர்வு ஜுன் 29-ல் தொடங்கி ஜுலை 8-ம் தேதி முடிவடையும். இதற்கு மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர் வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாண வர்களும், தேர்வர்களும் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஜுன் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி (சனிக்கிழமை) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் கணினி மையங்கள் (பிரவுசிங் சென்டர்) மூலம் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன் லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ ஆன்லை னில் விண்ணப்பிக்கும் பள்ளி களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின் னர் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ள லாம்.

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது.

தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x