Published : 09 Jul 2017 10:09 AM
Last Updated : 09 Jul 2017 10:09 AM

ஜிஎஸ்டி வரி பாதிப்பை கண்டித்து மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னையில் 14-ம் தேதி ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏழை எளிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கக்கோரி ஜூலை 14-ம் தேதி மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவ ளவன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

ஏழை எளிய மக்களுக்கு ஜிஎஸ்டி பலன் தரும் என்று கடந்த ஜூன் 30-ம் தேதி பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், ஜிஎஸ்டியால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்திருக்கிறது.

உணவகங்களில் உணவுப் பொருட்கள் விலை உயர்ந் துள்ளது. தண்ணீர் கேன் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இவை யெல்லாம் அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக்கடுமை யாக பாதித்து வருகிறது.

வெற்றுப் பகட்டு

ஒரே நாடு, ஒரே வரி என்ற அறிவிப்பு வெற்றுப் பகட்டே ஆகும். ஜிஎஸ்டி விகிதங்கள் மாறுபடுவதால் பெட்ரோல் மீது 57 சதவீதம், டீசல் மீது 55 சதவீதம் வரி விதிக்கும் மத்திய, மாநில அரசுகள் இவற்றை ஜிஎஸ்டி-யின் கீழ் ஏன் கொண்டு வரவில்லை.

எனவே, ஜிஎஸ்டியால் ஏழை எளிய மக்கள், சிறு குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க வேண்டுமென மக்கள் நலக் கூட்டமைப்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத் துகிறது.

இந்தக் கோரிக்கைகளுக்காக ஜூலை 14-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x