Published : 30 Jan 2017 09:27 AM
Last Updated : 30 Jan 2017 09:27 AM

ஜிஎஸ்டி வரி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு

செங்கல்பட்டு சரகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது.

சுங்கம் மற்றும் தேசிய அகாடமி அலுவலர் வட்சன், தொழில் நிறுவன பிரதிநிதிகளிடம் பேசும் போது: நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பை தவிர்ப்பதோடு, தொழில் புரிவது எளிதாகும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள் இணையதள ஜிஎஸ்டி பரிவர்த் தனைக்கு தயாராக உள்ளன. இதேபோல், வணிகர்கள் தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் மாற தயாராக வேண்டும்.

ஏற்கெனவே, மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரசு விதிக்கும் பிற வரி ஆகிய சட்டங்களில் பதிவு செய் துள்ளவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண் டும் என்று அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் செங்கல்பட்டு சரக சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x