Published : 03 Jul 2017 09:44 AM
Last Updated : 03 Jul 2017 09:44 AM

ஜிஎஸ்டி எதிரொலி: சைக்கிள், குடிநீர் விலை உயர்வு- பைக், கார்கள் விலை குறைந்தன

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பைக், கார்களின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ரூ.4,500-ல் இருந்து ரூ.20,000 வரை விலை கொண்ட சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜிஎஸ்டியில் சைக்கிள்களுக்கு 12 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரி முன்பு 5 சதவீதமாக இருந்தது. அதன்படி, ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு சைக்கிளின் விலை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.315 முதல் ரூ.1,400 வரை விலை உயர்ந்துள்ளது.

குடிநீர் கேன் விலை உயர்வு

20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடத்துக்கு ஏற்றார் போல 20 லிட்டர் கேன் ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்டு வருகிறது. ஜூலை 1-ம் தேதி முதல் குடிநீர் கேனின் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x