Published : 07 Dec 2016 08:22 AM
Last Updated : 07 Dec 2016 08:22 AM

சொந்த சகோதரியை இழந்தது போன்ற உணர்வு: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உருக்கம்

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு என்னுடைய சொந்த சகோதரியை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி யுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உருக்கத்துடன் தெரிவித் தார்.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி யிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் உயிர்பிழைத்து விடுவார் என்று கடைசி நிமிடம் வரை நம்பினேன். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண் டனர்.

அவர் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்ற செய்தியறிந்து நாடாளுமன் றத்தில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தேன். இரவு 7 மணிக்கு டாக்டர் ரெட்டியிடம் பேசியபோதும் சிறிது நம் பிக்கை இருந்தது.

புரட்சித்தலைவி தன் பெய ருக்கு ஏற்றார்போல் ஈடு இணையற்ற புரட்சித் தலைவியாவார். அவருடைய துணிச்சல், உறுதியான நம்பிக்கை, செயலூக்கம், அறிவு, துணிச்சலான நிர் வாகம் போன்றவற்றிற்காக நான் என்றைக்குமே அவரைக் கண்டு வியந்துள்ளேன். என்னிடம் மிகவும் பாசத்துடன் பழகியவர். அவருடைய கடைசி பொது நிகழ்ச்சியான சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் என்னுடன் பங்கேற்றார்.

என்னுடைய சொந்த சகோதரியை இழந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித் துக்கொள்கிறேன். தமிழ் நாட்டுக்காகவே அவர் வாழ்ந்தார். தமிழக மக்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்வார்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x