Published : 09 Jul 2017 10:15 AM
Last Updated : 09 Jul 2017 10:15 AM

செப்டம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்? - சூழல் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு

ஆர்.கே.நகர் தொகுதியில் செப்டம்பரில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் முதல்வர் ஜெயல லிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவுக்கு 3 நாட்களே இருந்த நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலை ரத்து செய்வதாக ஆணையம் அறிவித்தது.

வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட் டதாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பணம் வழங் கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. அதனடிப் படையிலேயே இடைத் தேர்தலை ஆணையம் ரத்து செய்தது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி யில் உகந்த சூழல் ஏற்படும் போது, தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நசீம் ஜைதி, ஓய்வு பெறுவதற்கு முன்பு, ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் தொடர் பாக ஆய்வு நடந்து வருவ தாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியிருந்தார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பேற்றுள்ள நிலை யில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசித்து வருவ தாக தேர்தல் ஆணைய வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் தொகுதி யிலும் தேர்தல் ரத்து செய்யப் பட்டது.

இந்த தொகுதிக்கான இடைத் தேர்தலை செப்டம்பரில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத் துள்ளது. அதே நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

சின்னம் கிடைக்குமா?

ஆர். கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஓபிஎஸ் அணி சார்பில் இ.மது சூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இருவரும் உரிமை கோரியதால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் இரு அணிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தேர்தலுக்கு முன்பு இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு தரப்பினரும் இணைப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x