Published : 31 May 2016 08:08 AM
Last Updated : 31 May 2016 08:08 AM

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு: வெளிநடப்பு செய்யாமல் அமைதி காத்த திமுக உறுப்பினர்கள்

தமிழக முதல்வராக பொறுப் பேற்றுக் கொண்ட அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி, ஆணையர் பி.சந்தரமோகன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு மேயர் சைதை துரைசாமி பாராட்டு தெரிவித்தார். அந்த பாராட்டு உரையில், நடுநிலையாக வாக்களிக்கும் 5 சதவீத மக்களின் வாக்கை பெற, திமுக சார்பில் தமிழகம் கண்டிராத வகையில் பெரும் பொருட் செலவில் புதிய விளம்பர உத்தி கையாளப்பட்டது. அத்தகைய பொய் பிரச்சாரங்களால் ஜெயலலி தாவின் செல்வாக்கை அசைக்க முடியவில்லை. 2011-ல் கூட்டணி அமைத்து போட்டி யிட்டபோது 38.40 சதவீதம் வாக்குகளைப் பெற்ற அதிமுக, 2016 தேர்தலில் தனித்து நின்று 40.78 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பது தெரிய வருகிறது. இந்த வெற்றி முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சித் திறனுக்கு கிடைத்த அங்கீகாரம். அவரது நிர்வாகத் திறனுக்கு மக்கள் அளித்த நற்சான்று. மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இம்மா மன்றம் தனது உளமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

பின்னர் மேயர் சைதை துரைசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். எம்எல்ஏக்களாக வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுரை சுமார் 25 நிமிடங்கள் வாசிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், பாராட்டுரையை நிறுத்திக்கொண்டு மக்கள் பிரச்சினையை பேச நேரம் செலவிடுங்கள் என்று கூச்சலிட்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்த கூட்டத்தில், தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில ரூ.8 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில், 10 ஆயிரத்து 280 எல்இடி விளக்குகளை பொருத்துவதற்கான பணிகளை ஒப்பந்ததாரரிடம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ரூ.11 கோடியே 18 லட்சம் செல வில் கிண்டி சர்தார் பட்டேல் சாலை மற்றும் புரசைவாக்கம் நெடுஞ் சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணி களை ஒப்பந்ததாரருக்கு வழங்குவ தற்கான தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.

திமுக வெளிநடப்பு இல்லை

இந்த கூட்டத்தில் திமுக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்ய வில்லை. இது தொடர்பாக திமுக உறுப்பினர் டி.சுபாஷ் சந்திரபோஸி டம் கேட்டபோது, “திமுக தலைவர் களைப் பற்றி மேயரும், அதிமுக உறுப்பினர் களும் கடுமையாக விமர்சித்தனர். மக்கள் பிரச்சினைகளை மன்றத் தில் பேச வேண்டும் என்பதற்கா கவே, நாங்கள் அமைதி காத்து, வெளிநடப்பு செய்யாமல் அவையிலேயே அமர்ந்திருந் தோம்” என்றார்.

அதிமுக உறுப்பினர் வேதனை

கூட்டத்தில் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவரும், மாதவரம் அதிமுக கவுன்சிலருமான டி.தட்சிணாமூர்த்தி பேசும்போது, கட்சி துரோகிகளால் வீழ்த்தப் பட்டேன் என்றார்.

மேயர் வேண்டுகோள்

அவரவர் வார்டுகளில் முடிக்கப் படாத நிலையில் உள்ள சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தெரு மின் விளக்குகள் நிறுவுதல், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது போன்றவை குறித்து எழுத்துபூர் வமாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று மன்ற உறுப்பினர்களை மேயர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x