Last Updated : 23 Jan, 2015 10:25 AM

 

Published : 23 Jan 2015 10:25 AM
Last Updated : 23 Jan 2015 10:25 AM

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய தகவல் உதவி மையம் திறப்பு: ஆவணங்களை இலவசமாகப் பெறலாம்

பொதுமக்கள் வசதிக்காக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‘சமூக தணிக்கை பிரிவு’ என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து தகவல்களும் ஆவண வடிவில் இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பாஸ்போர்ட் எடுக்க, மேற்கண்ட நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். சிலருக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு சிரமப்படும் பொது மக்களின் வசதிக்காக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத் தில் ‘சமூக தணிக்கைப் பிரிவு’ (Social Audit Cell) என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் தொடங் கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் கூறியதாவது:

பாஸ்போர்ட் கோரி தினமும் நூற் றுக்கணக்கானோர் விண்ணப்பிக் கின்றனர். நாங்கள் கேட்கும் ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பத்தை சமர்ப்பித்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். உரிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பிப்பது, விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்வது, விண்ணப்பத்தை பெறும் அலுவலர் அதை சரியாக பரிசீலனை செய்யாதது, காவல்துறை விசாரணையில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற காரணங்களால், பாஸ்போர்ட் கிடைப்பது தாமதமாகிறது.

என்ன காரணத்தால் தாமத மாகிறது என்று, படித்தவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் ஓரளவு தெரிந்துகொள்கின்றனர். அலுவல கத்துக்கு நேரில் வந்து விசாரிக் கின்றனர். அல்லது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொள்கின்றனர். மற்றவர்கள் இந்த வழிகூட தெரியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது வசதிக்காக இந்த புதிய தகவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்துக்கு பொதுமக் கள் நேரில் வந்து பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட் விண்ணப்ப நிலவரம் குறித்து கணினி உதவியுடன் அறிந்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். இதன்மூலம், குறை பாடுகளை சரிசெய்து அவர்கள் விரைவாக பாஸ்போர்ட் பெறமுடி யும். அத்துடன், தரகர்களிடம் சிக்கி ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இத்தகவல்களை அளிக்க கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்த மையம் மூலம் இந்த ஆவணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், அவசர சான்றிதழ் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள் பற்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட் டாலும், இந்த உதவி மையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x