Published : 30 Dec 2016 08:50 AM
Last Updated : 30 Dec 2016 08:50 AM

சென்னை ஐஐடி இணையதளத்தை முடக்கிய மர்ம நபர்கள்

தமிழகத்தில் சென்னை கிண்டியில் ஐஐடி உள்ளது. இங்கு 16 துறைகளில் தொழில்நுட்ப பாடங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஐஐடி வழங்கப்படும் பல்வேறு படிப்புகள், அங்குள்ள துறைகள், நடத்தப்படும் கருத்தரங்குகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் தொடர்பான விவரங் களை அனைவரும் தெரிந்துகொள்வதற்காக தனி இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இரவு இந்த இணைய தளத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இந்த விவரம் நேற்று காலையில்தான் ஐஐடி அதி காரிகளுக்கு தெரிய வந்தது. தொழில்நுட்ப பிரச்சினை கண்டறியப்பட்டு குறைபாடுகள் விரைந்து சரிசெய்யப்பட்டதாக ஐஐடி இயக்குநர் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஐஐடி இணையதளத்தை பராமரிக்க 2 சர்வர்கள் உள்ளன. முதன்மை செர்வரான முதலாவது சர்வரில் எந்த பாதிப்பும் இல்லை. கூடுதல் சர்வரான 2-வது சர்வரில் 5 துறைகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த தகவல்கள்தான் முடக்கப்பட்டன. இதுகுறித்து எங்களுக்கு தெரிய வந்ததும் உடனடியாக குறைபாட்டை சரிசெய்துவிட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x