Published : 16 May 2016 07:29 AM
Last Updated : 16 May 2016 07:29 AM

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,500 பணியாளர்கள்

சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பதிவாகும் வாக்கு களை எண்ணும் பணியில் 1,552 பணி யாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள னர்.

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் 3,771 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்த வாக் காளர்கள் எண்ணிக்கை 39 லட் சத்து 50 ஆயிரம் பேர். இன்று வாக்குப்பதிவு முடிந்த பின், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களான ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல் கலைக்கழகம் ஆகிய 3 இடங் களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட உள்ளன.

மே 19-ம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாகம் - திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதியில் பதிவாகும் வாக்குகளும், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

இதையொட்டி 3 இடங்களிலும் தடுப்பு கட்டைகள், வலைகள் அமைப்பது என பல்வேறு பாது காப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் 1,552 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்களுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் நேற்று முன்தினம் பயிற்சி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x