Published : 30 Jan 2017 09:22 AM
Last Updated : 30 Jan 2017 09:22 AM

சென்னையில் அடகு கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை முயற்சி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர்

ஜஸ்அவுஸ் பகுதியில் அடகுக் கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை யடிக்க முயன்ற வடமாநில நபர் சிக்கினார். கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஐஸ்அவுஸ் ஜானி ஜான்கான் தெருவில் வசிப்பவர் முன்னாலால் (44). நகை அடகு கடை வைத்துள்ளார். அந்த கட்டி டத்தின் தரை தளத்தில் கடையும் முதல் தளத்தில் வீடும் உள்ளது. வீட்டுக்கு செல்வதற்கு கடைக்கு உள்பகுதியிலும் வெளியிலுமாக 2 வழிகள் உள்ளன. நேற்று காலை முன்னாலால், அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந் தனர். அப்போது பைக்கில் 3 பேர் முன்னாலால் கடைக்கு வந்தனர். 2 பேர் கடை வாசலிலேயே நிற்க, ஒருவர் மட்டும் உள்ளே சென்றார்.

நகை அடகு வைக்கத்தான் யாரோ வந்திருக்கிறார்கள் என நினைத்த முன்னாலால், வீட்டில் இருந்து உள்பக்க வழியாக இறங்கி கடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப் பாக்கியை எடுத்து முன்னாலால் நெற்றியில் வைத்து, ‘உங்களை கொலை செய்ய வரவில்லை. எனக்கு தேவை நகை, பணம் மட்டும்தான். நீங்கள் அமைதியாக இருந்தால் சுட மாட்டேன்’ என்று இந்தியில் கூறியிருக்கிறார்.

துப்பாக்கி முனையில் மிரட்டி யபடியே அந்த நபர் கடையில் இருந்த நகைகளை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் இருந்து வந்த வேலைக்கார பெண் வனிதா (55), இதைப் பார்த்து கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அருகே வசிக்கும் மக்களும் கடைக்காரர்களும் ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் கடைக்கு வெளியே நின்றிருந்த 2 கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

கடைக்குள் இருந்த கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றபோது, அவனை பால சுப்பிரமணியன் என்பவர் மடக்கிப் பிடித்தார். பொதுமக்களும் சேர்ந்து அவனைப் பிடித்து கட்டி வைத்து, ஐஸ்அவுஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸாரிடம் கொள் ளையனை ஒப்படைத்தனர். பட்டப் பகலில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட நபரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவிக்குமார் சிங் (24) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 16 தோட்டாக்கள், 2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கொடுத்த தகவலின்பேரில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களை காவல் நிலை யத்துக்கு அழைத்து வந்து, வேலைக்கார பெண் வனிதாவை அடையாளம் காட்டச் சொன்னார் கள். ஆனால், ‘இந்த 3 பேர் கொள் ளையடிக்க வரவே இல்லை’ என்று வனிதா கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று சென்னை யில் தங்கி கொள்ளையடித்து வந்தது தெரிந்தது.

அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேர்தான் போலீஸில் சிக்கி யுள்ளனர். முன்னாலால் கடையில் இருந்து தப்பிய 2 பேர் உட்பட கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x