சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்: 5 லட்சம் தலைப்புகளில் நூல்கள்

புத்தகப் பிரியர்களின் வரப்பிரசாதமான ‘37வது சென்னை புத்தகக் காட்சி’ இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான கடைகளில் புத்தகங்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படம்: ம.பிரபு

Published : 10 Jan 2014 08:10 IST
Updated : 23 Jan 2014 10:05 IST

37-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கி 22-ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, நிருபர்களிடம் கூறியதாவது; சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பில் 800 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 435 தமிழ் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 மீடியா பதிப்பாளர்கள் பங்கேற்று அரங்குகள் அமைக்கின்றனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புக ளில் புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வருகின்றன.

இந்த விற்பனையில், 10 சதவீதம் வெளிமாநில புத்தக விற்பனையாளர்கள் கடைகள் அமைத்துள்ளனர். 2,000 புதிய புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. தினமும் புத்தக வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ.10,000, ரூ.5,000 மற்றும் ரூ.3,000 வழங்கப்படுகின்றன.

புத்தகக் காட்சிக்கு வந்து, புத்தகம் வாங்குவோருக்கு 10 சதவீதம் கட்டண சலுகை உண்டு.

12 வயதுக்கு மேற்பட்ட அனைவ ருக்கும் 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், புத்தகக் காட்சிக்கு அனுமதியளிக்கப்படும்.

கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வந்தனர். சுமார் 10 கோடி ரூபாய்க்கான புத்த கங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு 10 லட்சம் பேர் வரலாம் என்றும் 15 கோடி ரூபாய் வரை புத்தகங்கள் விற்பனையாகும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

வசதிகள்

நுழைவு வாயிலிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புத்தகக் காட்சிக்கு செல்ல வாகன வசதி, குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளன. 1,500 கார்கள், 5,000 இரு சக்கர வாகன நிறுத்துமிடம், அவசர மருத்துவ தேவைக்கு கிளினிக், உணவு அரங்கம், ஓய்வுப் பகுதி, குறும்படக் காட்சி அரங்குகள் மற்றும் எழுத்தாளர், வாசகர் சந்திப்பு அரங்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor