Published : 28 Jun 2016 07:54 AM
Last Updated : 28 Jun 2016 07:54 AM

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் தொய்வு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் - கண்காணிப்பு கேமரா பொருத்தாதது ஏன் என்றும் கேள்வி

இளம்பெண் சுவாதி கொலை வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருப்பதற்காக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. காவல் துறைக்கு 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ள உயர் நீதிமன்றம், அதன்பிறகும் விசாரணையில் தொய்வு இருந்தால், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த 24-ம் தேதி காலை ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி, மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட் டார். சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் கொலையாளியை காவல்துறையினர் கண்டுபிடிக்க வில்லை. வழக்கு விசாரணையில் ரயில்வே போலீஸாருக்கும் மாநகர காவல்துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் தங்கள் அமர்வில் நேற்று காலை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். முன்னதாக, அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் வரச் சொன்னார்கள். அதையடுத்து அரசு வழக்கறிஞர் எஸ்.சண்முக வேலாயுதம் நீதிமன்றத்துக்கு வந்தார். அவரிடம், ‘‘நுங்கம் பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத் தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் ரயில்வே போலீஸாருக்கும், மாநகர போலீஸாருக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோல இருந்தால், அது விசாரணையை வெகுவாகப் பாதிக்கும். இதை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இதுதொடர்பாக அரசிடம் கருத்து கேட்டு இன்று பிற்பகலுக்குள் சொல்லுங்கள்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நீதிபதிகள் முன்பு பிற்பகல் 3 மணிக்கு அரசு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது நடந்த வாதம் வருமாறு:

அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம்:

இளம்பெண் சுவாதி கொலை வழக்கை ரயில்வே போலீஸில் இருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இவ் வழக்கில் குற்றவாளியை கண்டு பிடிப்பதற்காக உதவி ஆணையர் கே.பி.எஸ்.தேவராஜ் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை துணை ஆணையர் கண்காணித்து வருகி றார். சைபர் கிரைம் மற்றும் சிபிசிஐடி போலீஸாரும் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

நீதிபதி நாகமுத்து:

இந்த வழக்கு இன்றுதான் மாற்றப்பட்டி ருக்கிறது. கொலை சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இன்று திங்கள்கிழமை. இவ்வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தப் பிரச்சினை பற்றி பத்திரிகைகளில் விரிவாக எழுதப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. நானும் பல்வேறு பத்திரிகைகளில் இந்த விவகாரம் பற்றி படித்தேன். அனைத்திலும், வழக்கு விசாரணை யில் ரயில்வே போலீஸாருக்கும், மாநகர காவல்துறையினருக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல் பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர்:

டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் சம்பவ இடத் தைப் பார்வையிட்டனர். பத்திரி கைகளில் வெளிவந்துள்ள தகவல் சரியானது அல்ல. விசாரணையில் காவல்துறையினர் ஒருங்கிணைந் துதான் செயல்படுகின்றனர்.

நீதிபதிகள்:

இவ்வழக்கு விசாரணையை மாற்றுவதில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிறகு தான் வழக்கு மாற்றப்பட்டதா? நாங்கள் எங்கள் ஆதங்கத்தை தெரிவித்தோம். சுவாதியின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். 2 நாட்கள் அவகாசம் அளிக்கி றோம். அதன்பிறகும் வழக்கு விசார ணையில் தொய்வு இருப்பதாக அறிந்தால், தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று, நாங்களே தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வோம்.

நீதிபதி நாகமுத்து:

நுங்கம் பாக்கம் ரயில் நிலைய பிளாட் பாரத்தில் சுவாதியின் சடலம் மூடப்படாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் உங்கள் காவல் அதிகாரிகள் எங்கே போனார்கள்? ஒருவர் இறந்த பிறகும்கூட அவரது கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சுவாதியின் கண்ணியம் காக்கப்படவில்லை. அவரது சடலம் கண்காட்சியைப் போல 2 மணி நேரத்துக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சடலத்தை அப்புறப்படுத்துவதற் கான நடைமுறைகளை மேற் கொள்ள ஏன் அவ்வளவு நேரம் ஆனது?

ரயில்வே போலீஸார் அரசு கட்டுப்பாட்டில்தானே இருக்கி றார்கள். பிறகு ஏன் இந்த வழக்கை மாற்ற தாமதம் ஏற்பட்டது? போதிய எண்ணிக்கையில் ரயில்வே போலீ ஸார் இல்லை எனும்போது கண் காணிப்பு கேமராக்களை பொருத் தியிருக்கலாமே? அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அரசு ஏற்கெனவே தெரிவித் துள்ளது. கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்துவது கஷ்டமான வேலையும் இல்லை. பெரிய செலவும் இல்லையே?

அரசு வழக்கறிஞர்:

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை முன்னரே பொருத்தியிருக்கலாம்.

நீதிபதி:

இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்து, ஒருவர் உயிரிழந்த பிறகுதான் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கடும் குற்றச் செயல்களில் ஈடுபடு வோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்கிறீர்கள். காவல்துறையினரின் தாமதம் காரணமாக 90 சதவீத வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. அது போன்ற தாமதத்துக்கு என்ன காரணம்? அதை சரிசெய்ய உங்க ளிடம் எந்த வழிமுறைகளும் இல்லை.

இவ்வாறு வாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x